நீ நடிக்க லாயக்கில்லை, அழகு ,கவர்ச்சி இல்லைனு சொல்லி சிரிச்சாங்க ! தனுஷ் பட நடிகை வருத்தம்

0
1139
Actress tapsee
- Advertisement -

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படத்தின் மூலம்.இவர் தமிழ் ஓரளவிற்கு பெயர் தெரிந்த நடிகை ஆனார். ஆனால் தமிழில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. தமிழை தாண்டி தெலுங்கில் சென்று கிளாமராக நடித்தார் டாப்ஸி.தெலுங்கில் நடிக்கும் போதே இன்னும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஹிந்தியிலும் வாய்ப்புகள் தேடினார் டாப்ஸி. ஆனால், ஹிந்தி திரையுலகம் சென்ற போது அவர் பட்ட அவமானங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.

actress tapsee pannu

இது குறித்து அவரே கூறியுள்ளார்,

- Advertisement -

நான் நடிக்க வாய்ப்புகள் தேடியபோது, என்னை பல இயக்குனர்கள் எதற்காக நடிக்க வந்தாய் என்றுதான் கேட்டனர். உன்னிடம் அழகு இல்லை உன் மூஞ்சியில் ரியாக்சன் இல்லை. உனக்கு கிளாமராக நடிக்க ஒத்து வராது.

உனக்கு சிபாரிசு செய்ய ஆள் கிடையாது. நீ ஏதாவது ஒரு பெரிய ஆளின் மகளாக இருந்தால் கூட அதனை வைத்து படத்திற்கு விளம்பரம் தேடலாம். ஆனால், அதுவும் கிடையாது. நீ ஆயுதமாக நடிக்க லாய்க்கு இல்லாதவள் என கூறி என்னை நிராகரித்தனர்.

taapsee-pannu

ஆனால் எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும். அதனை தாண்டி பட தயாரிப்பு நிர்வாகம் பற்றி தெரியாது. நான் பட்ட கஷ்டங்களை என தங்கையை பட விட மாட்டேன். எனக்கு என் உலகமே என தங்கை தான். அவள் நடிக்க வந்தால் அவளுக்கான அனைத்து உதவிகளையும் செய்வேன் ,என கூறினார் டாப்ஸி.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவர் அமிதாப் பச்சனுடன் நடித்து மேகா ஹிட்டான படம் பிங்க். இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement