படுக்கைக்கு மறுத்ததால் 3 படங்களின் வாய்ப்பை இழந்தேன்..! புலம்பும் கார்த்தி பட நடிகை..!

0
104
Karthi

கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “காற்று வெளியிடை” படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் நடிகை அதிதி ராவ். பாலிவுட்டில் 2009 ஆம் ஆண்டு துவங்கி ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக சொல்லபோனால் 2013 ஆம் ஆண்டு வெளியான “மர்டர் 3” படத்தில் கவர்ச்சியாக நடித்து அசத்தினார்.

Katru Veliyidai

சிறுவயது முதலே பாடகியாக வர வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் நுழைந்த இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்து, எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்த அதிதி, திரை துறையில் பல முறை பாலியல் தொல்லைகளை சந்தித்துள்ளார் அதனால் சில படங்களின் வாய்ப்பையும் இழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளத்தில் #metoo என்ற ஹேஸ்டேக் மூலம் பல்வேறு பிரபலங்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறிவரும் நிலையில் நடிகை அதிதி ராவ்வும் தனக்கு நேர்ந்த தொல்லைகள் பற்றி கூறியுள்ளார்.

Aditi-Rao-Hydari

சமீபத்தில் இது குறித்து பேசியுள்ள நடிகை அதிதி, புதிதாக சினிமாவில் நுழைந்து சாதிப்பது என்பது எல்லாம் மிகவும் கடினம் தான். ஆனால், முடியாது என்றெல்லாம் இல்லை கண்டிப்பாக முடியும் அதற்கு நானே ஒரு உதாரணம் தான். சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட் செய்து தான் ஆக வேண்டும் என்ற ஒரு நிலை உள்ளது ஆனால்,நான் அப்படி இல்லை.

நான் நடிக்க வந்த புதிதில் ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. 3 பட டீல் இருந்தும் அட்ஜஸ்ட் பண்ண மறுத்ததால் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இருப்பினும் நான் எனது கொள்கையில் நிலையாக இருந்தேன். எனக்கு படம் இல்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்று எண்ணினேன், இன்றுவரை கண்ணியத்துடன் வாழ்ந்து வருகிறேன். அதனால் தான் என்னவோ நம்பர் 1 நடிகையாக வர முடியவில்லை.