நடிகர் அர்ஜூன் மகளின் நலுங்கு விழா புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்ல பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என்ன பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியும் அர்ஜுன்தான் தொகுத்து வழங்கி இருந்தார்.
சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து அர்ஜுன் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரு மகள்கள் இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா குறித்து:
இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் ‘பட்டத்து யானை’என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படங்களிலும் ஐஸ்வர்யா நடித்தார். இருந்தாலும், தனக்கென ஒரு இடத்தை பிடிக்காத ஐஸ்வர்யா இப்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் என்ற செய்தி இணையதளத்தில் வைரலாக இருந்தது.
ஐஸ்வர்யா உமாபதி காதல்:
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாவதியும் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் திரைக்கு வர இருக்கும் ‘ராஜகிளி’ என்ற படத்தையும் அவர் இறக்கி இருக்கிறார். அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் இவர் பங்கு பெற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் காதலும் மலர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.
ஐஸ்வர்யா – உமாபதி திருமணம்:
சமீபத்தில் நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சியதார்தம் நடந்தது. இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுடைய திருமணம் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவருமே பிரபலங்களை சந்தித்து திருமண அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்கள்.
நலுங்கு விழா:
மேலும் இவர்களுடைய திருமணம் அர்ஜுனுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை தோட்டத்தில் நடக்க உள்ளது. இவர்களுடைய திருமண பத்திரிகை பாக்ஸ் போன்ற டிசைன் செய்திருக்கிறார்கள். ஒரு பத்திரிகையின் விலை மட்டுமே சுமார் 5000 ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு நலுங்கு விழா நடைபெற்று உள்ளது. அந்தத் புகைப்படங்கள் தான் இப்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.