ஐஸ்வர்யா செய்த கேவலமான செயல்.! நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.! அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா

0
103
Aishwarya-Biggboss
- Advertisement -

கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும், இந்த வருடம் நடைபெற்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் பல முரண்பாடான நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தொலை காட்சியில் ஒரு மணி நேரமே ஒளிபரப்ப பட்டது. இந்த முறை சுவாரசியத்தை அதிகரிக்க ஒருமணி நேரம் மற்றும் 30 நிமிடங்கள் ஒளிபரப்பாகிறது.

Daniel

இதுபோக “Hot Star ” App மூலம் “Midnight “மசாலா , “Morning “மசாலா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத சில பிரத்யேக காட்சிகளை ஒளிபரப்பு செய்து கொண்டு இருக்கிறார்கள். இரவில் அவர்கள் செய்வதை “Midnight ” மசாலாவில் ஒளிபரப்புகின்றனர். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் யாஷிகா வீட்டின் இந்த வார தலைவியாக பொறுப்பு ஏற்கிறார்.

- Advertisement -

அதனையடுத்து, சிறிது நேரத்தில் போட்டியாளர்கள் இரவு உணவு சாப்பிட தயாராகிறார்கள். அப்போது வீட்டின் வெளியே இருந்து உள்ளே வரும் ஐஸ்வர்யா, சமையல் அறைக்கு செல்கிறார். டேனி இரவு உணவினை (பரோட்டா) தயார் செய்வதினை பார்த்து அவருக்கு உதவுவதற்காக அவரிடம் செல்கிறார். அப்போது ‘டேனி உன் கைகளில் இருந்து சிகரெட் ஸ்மல் வருகிறது நீங்கள் கை கழுவினீர்களா? என்று ஐஸ்வர்யா கேட்கிறார். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா நான் கை கழுவிவிட்டு தான் வருகிறேன் என்று கூறினார் டேனி.

Aishwarya

மேலும், சில வினாடிகள் கழித்து மாவினை பிசைய செல்லும் போது டேனி, ஐஸ்வர்யாவின் கைகளை முகர்ந்து பாருங்கள் என ஜனனி-யிடம் சொல்கிறார். ஜனனியும், ஆம் சிகரெட் ஸ்மல் வருகிறது என்று சொல்கிறார் . மேலும், டேனியிடம் சிகரெட் பிடித்தால் விரல்களில் தானே ஸ்மல் வரும் இவருக்கு எப்படி கையின் மேலே வருகிறது? என்று கேட்க டேனியும் சிரித்துக்கொண்டே அவளுக்கு முற்றிவிட்டது என்று கூறினார். அதாவது ஐஸ்வர்யாவின் சிகரெட் பழக்கம் அதிகரித்து விட்டதாக சொல்கிறார்.

janani

மக்களிடையே வரவேற்பினை பெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்த வருடம் ஆரம்பம் முதலே கவர்ச்சியான ஆடை, படுக்கை அறையில் சில்மிஷம் மற்றும் போட்டியாளர்கள் கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பது போன்ற விடயங்கள் நிகழ்ச்சியினை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. ஏற்கனவே, பாலாஜியின் மீது குப்பையினை கொட்டி மக்களின் வெறுப்பை பெற்ற ஐஸ்வர்யா, தற்போது புகைபிடிக்கும் பழக்கம் மூலமாகவும் மக்களிடையே வெறுப்பினை சம்பாதித்து வருகிறார்

Advertisement