காவி உடையில் கவர்ச்சியாக போஸ்..!நடிகை அமலா பாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

0
309
Amala-paul

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் கதநாயகியாகவும் நடித்திருந்தார்.

ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர் சமீப காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள். விவகரத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அமலா பால் மிகவும் சுதந்திரமாக தான் சுற்றி வருகிறார்

தற்போது விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா பால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார். மேலும் தனது சமீப கால நடவடிக்கைகளையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.அந்த புகைப்படத்தில் ஐயப்ப பக்தர்கள் அணியும் காவி வேட்டியை அணிந்து கொண்டு தொடை தெரியும் அளவிற்கு தூக்கி காட்டியுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த பல நெட்டிசன்களும் பக்திக்காக அணியும் காவி உடையை இப்படி அணியலாமா என்று அமலா பாலை திட்டி தீர்த்து வருகின்றனர்.