பிளாஸ்டகை தவிர்ப்போம்..!கவர்ச்சி புகைப்படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய அமலா பால்..!

0
302
Actress-Amala-paul

தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது.

ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர் சமீப காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள். விவகரத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அமலா பால் மிகவும் சுதந்திரமாக தான் சுற்றி வருகிறார்.

தற்போது விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா பால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார். சமீப காலமாக அம்மணி படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்ட நடிகை அமலா பால்,, அந்த புகைப்படத்திற்கு கீழே பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், நான் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பதில் உறுதியாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.அமலா பாலின் இந்த விழிப்புணர்வை பாராட்டி வந்தாலும் ஒரு சிலரோ அதனை கூட கவர்ச்சி புகைப்படம் பதிவிட்டு தான் சொல்வீர்களா என்று கிண்டலடித்து வருகின்றனர்.