தன்னுடைய மனைவி குறித்து அன்பே வா சீரியல் நடிகர் விராட் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விராட். இவர் முதன் முதலில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த பேரழகி என்ற தொடரில் தான் நடித்து இருந்தார். இதை அடுத்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் நடித்திருக்கிறார்.
இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இடையில் இந்த சீரியலில் இருந்து தொடர்ந்து நடிகைகள் காரணமின்றி வெளியேறி இருந்தார்கள். இருந்தாலும், சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் பூமிகா மற்றும் வருனின் காதல் கதையை மையாக கொண்டு செல்கிறது. இந்த சீரியலில் விராட் என்பவர் நாயகனாக நடிக்கிறார். டெல்னா டேவிஸ் என்பவர் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விராட்க்கு திருமணம் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் நவீனா என்பவரை தான் திருமணம் செய்திருக்கிறார். இவர் மேக்கப் ஆர்டிஸ்ட். இவர் செலிப்ரட்டி மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்கள் இருவருமே நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் மகாபலிபுரத்தில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. பெற்றோர்களுடைய சம்மதத்துடன் நவீனா- விராட் இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியானது தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
விராட் பேட்டி:
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இருவருமே பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அதில் விராட், என்னுடைய மனைவி நவீனா ஏற்கனவே விவாகரத்து ஆனவர். இவருக்கு இளம் வயதிலேயே திருமணம் ஆனது. அப்போது அவருக்கு 18 வயது. அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். பலருமே ஏன் இப்படி திருமணம் செய்து கொள்கிறாய்? என்ன பிரச்சனை? என்றெல்லாம் கேட்டார்கள்.
மனைவி குறித்து சொன்னது:
என்னுடைய மனைவி எப்படிப்பட்டவள் என்று எனக்கு தான் தெரியும். அவருடைய வாழ்க்கை தவறான ஒருவர் கையில் சென்றதால் மாறிவிட்டது. அதற்காக அவருடைய வாழ்க்கையை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு அவள் சரியானவள். எங்களுடைய வாழ்க்கை சரியாக அமையும். விவாகரத்தான பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறது தப்பு கிடையாது. இவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் சந்தோஷமா இருக்கலாம்னு தோணுச்சு. நாம நல்லா வாழ்ந்து காட்டுறது மூலமா அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நினைக்கிறேன்.