நடிகரின் பெயரை கேட்டவுடன் கதையை கூட கேட்காமல் நடிக்க ஓகே சொன்ன அஞ்சலி ! யார் தெரியுமா ?

0
1267
Anjali actress
- Advertisement -

நடிகர் ஜீவா நடித்த கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்திற்கு பிறகு நல்ல கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்தார், இருப்பினும் இவருக்கு படவாய்ப்புகள் நிறைய வரவில்லை.

vijay sethupathi

சிறப்பான நடிகை என்ற பெயர் வாங்கியதால் படங்களில் சற்று இழுத்து போத்தி கொண்டு நடித்தார் அஞ்சலி .ஆனால் அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் கவர்ச்சி பக்கத்திற்கு மாறினார்.இதனால் கவர்ச்சி போட்டோ ஷூட்களை எடுத்து பல தயாரிப்பு கம்பெனிகளுக்கு அனுப்பினார் .மேலும் பல தெலுகு மற்றும் தமிழ் படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கலக்கினார்.

- Advertisement -

தற்போது சசிகுமார் இயக்கிவரும் நாடோடிகள் 2-ஆம் பாகத்தில் நடித்து வரும் அஞ்சலி ,தமிழ் தெலுகு என ஏகப்பட்ட பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார்.தற்போது விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கப்போகிறாராம்.இந்த படத்தில் நடிப்பதற்காக படக்குழுவினர் அஞ்சலியை அணுகியபோது படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி என்று தெரிந்ததும் படத்தின் கதையை கூட கேட்காமல் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

Advertisement