நாடோடிகள் 2 படத்தால் கண்கலங்கிய அஞ்சலி..! காரணம் சமுத்திரக்கனி.! அஞ்சலி வெளியிட்ட உண்மை

0
410
- Advertisement -

தென்னிந்திய நடிகைகள் தமிழ் சினிமாவை ஆகாரமித்துக் கொண்டிருந்த கட்டத்தில், தனது அழகான தமிழ் கலாச்சார முகத்துடன் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. தற்போது இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிவரும் “நாடோடிகள் 2” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அஞ்சலி நடித்த “கற்றது தமிழ் “மற்றும் “அங்காடி தெரு ” ஆகிய இரண்டு படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் மாடர்ன் நடிகையாக மாறிய அஞ்சலி, சற்று கவர்ச்சியில் இறங்கியதால் குடும்ப பாங்கான பெண் நடிகை என்ற பெயரை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது மார்கெட்டை கைவிட வேண்டிய நிலைமைக்கு உள்ளனர்.

- Advertisement -

அதன் பின்னர் சுதாரித்திக் கொண்ட நடிகை அஞ்சலி தற்போது மீண்டும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் . தற்போது நடிகர் சசி குமார் நடித்து வரும் “நாடோடிகள் 2 ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தில் நடித்துள்ள அஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தில் தான் நடித்துள்ள ஒரு காட்சியை பற்றி பதிவிட்டுள்ளார். அதில் “தனது சினிமா கெரியரில் இது போன்ற கட்சியை தமக்கு அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி ” என்று இந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனியை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement