வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம், இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி- அண்ணா சீரியல்

0
116
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று அண்ணா. தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதை தான் இந்த சீரியல். பல போராட்டங்களுக்கு பின் சண்முகம் தன் பெரிய தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறார். சண்முகம்-பரணி இடையே காதல் மலர்கிறது. மேலும், சண்முகம்- பரணி இருவரும் ரத்னாவின் வீட்டிற்கு சென்று இருந்தார்கள். அப்போது ரத்னாவுக்கு பிரச்சனை இருப்பது போல சண்முகத்துக்கு சந்தேகம் வந்தது. ஆனால், சண்முகத்தால் ரத்னாவிடம் பேச முடியவில்லை.

-விளம்பரம்-

அதன் பின் பரணி, சண்முகத்தை வம்பித்து வந்தார். உடனே சண்முகம் அவளுக்கு மல்லிகை பூ வாங்கி கொடுத்து சமாதானம் செய்தார். பின் சண்முகம், பீச்சுக்கு கூட்டிட்டு போறேன். லேட்டா வீட்டுக்கு போகலாம் என அழைத்துச் செல்ல இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இன்னொரு பக்கம் பாக்கியம் மற்றும் இசக்கி கோவிலுக்கு போய் வீட்டுக்கு வரும் போது வைகுண்டம் கொண்டு வந்த பலகாரங்கள் சிந்தி கிடந்தது பார்த்து அதிர்ச்சி ஆகி இருந்தார்கள். தான் அசிங்கம் படுத்தி அனுப்பி இருந்ததாக சௌந்தரபாண்டி சொல்லி இருந்தார். ஆனால், யார் என்று தெரியாமல் இருவரும் குழம்பி இருந்தார்கள்.

- Advertisement -

அண்ணா சீரியல்:

பின் கனியின் மூலமாக வைகுண்டம் அவமானப்பட்ட விஷயம் தெரிந்து சண்முகம் பயங்கரமாக கோபப்பட்டார். உடனே சௌந்தரபாண்டியன் வீட்டுக்கு கிளம்ப, அவனை பரணி தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார். இருந்தும் சண்முகம் கேட்கவில்லை. இந்த நிலையில் இன்று எபிசோடில் பரணி, சண்முகத்தை தடுத்து நிறுத்தி அரிவாளை கையில் எடுக்க கூடாது, அகிம்சை முறையில் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொன்னார்.

இன்று எபிசோட்:

அடுத்த நாள் காலையில் சௌந்தரபாண்டி, கோவிலில் தீபாவளிக்காக இலவச வேட்டி சேலை கொடுத்து கொண்டிருக்கிறார். அப்போது கோவிலுக்கு வந்த சண்முகம் அங்கு வந்து வரிசையில் நிற்கிறார். இதை பார்த்த சௌந்தரபாண்டி, என்னாலே உனக்கும் வேட்டி வேண்டுமா? என்று கேட்க, சண்முகம் ஆமாம் என்று சொல்கிறார். உனக்கு வேட்டி மட்டுமில்ல ஜட்டியும் நான் தான் தரணும் என்று நக்கலாக சௌந்தரபாண்டி பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

சண்முகம் செய்த வேலை:

உடனே சண்முகம், எனக்கு வேட்டி வேணும் தான். ஆனால், அந்த வேட்டி வேணாம் என்று சொல்லி சௌந்தரபாண்டியன் வேட்டியை உருவி அண்டராயருடன் நிற்க வைக்கிறார். அடுத்து ஜட்டி தரேன்னு சொன்னீங்களே எடுத்துக்கவா என்று சண்முகம் கேட்க, அங்கிருந்து சௌந்தரபாண்டி ஓடுகிறார். அதன் பின் வீட்டிற்கு வந்த ஷண்முகத்தை பார்த்து பரணி, நீ பண்றதெல்லாம் காமெடியா இருந்தாலும் இதெல்லாம் இசக்கியை தான் பாதிக்கும் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை சண்முகம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் சௌந்தரபாண்டி, வேட்டி இல்லாமல் வீட்டிற்கு வருவதை பார்த்த இசக்கி சிரிக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த சௌந்தரபாண்டி, இதுக்கெல்லாம் காரணம் உன் அண்ணன் தான் என்று மண்ணெய்யை எடுத்து இசக்கி மீது ஊற்றி கொளுத்த போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இசைக்கி நிலைமை என்ன? சண்முகம் என்ன செய்வார்? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement