உண்மை அறியாமல் சினேகனிடம் கேள்விகேட்டு பல்பு வாங்கிய ஆர்த்தி !

ஒரு திரைப்பட பாடல் ஆசிரியராக இருந்து சுமார் 3000 பாடல்களுக்கு மேல் எழுதி இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி கவிஞர் சினேகனை மக்களில் ஒருவராக அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. இவருடன் சேர்த்து ஆர்த்தியும் அதே நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர்.

Aarthi

தற்போது கவிஞர் சினேகனின் போலி ட்விட்டர் கணக்கு உடையவரிடம் பல்ப் வாங்கியுள்ளார் ஆர்த்தி. #AskThalaivarSnegan என்ற tag சென்று சிநேகனிடம் உங்களுக்கு கல்யாணம் எப்போது எனக் கேட்டார் ஆர்த்தி. ஆனால் அது ஒரு போலி கணக்கு அதுக்கு பதில் கொடுக்குகிறீங்களே என பல்ப் கொடுத்தனர் ட்விட்டர் வாசிகள்.

Snehan,Aarthi

கவிஞர் சினேகன் ட்விட்டரில் கிடையாது எனக் கூட தெரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள் என இணையதளவாசிகள் ஆர்த்தியை கலாய்க்க, எனக்கு தெரிந்தே தான் இவ்வாறு செய்தேன் என ஆர்த்தி சமாளித்துள்ளார். பிக் பாஸ்க்கு பிறகு ஆர்த்தியின் பெயர் கெட்டுவிட்டது என்பது தான் உண்மை.