விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா, ஸ்பெஷல் ஆஃபர் அறிமுகம் செய்தார். இதை எப்படியாவது சுதப்பி பாக்கியாவை மாட்டி விட வேண்டும் என்று கோபி- செப் ஆனந்த் மீண்டும் திட்டம் போட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் படத்தின் பூஜைக்காக எல்லோருமே வந்து விட்டார்கள். எழில் தன் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது தயாரிப்பாளர், எல்லா டாக்குமென்டில் கையெழுத்து வாங்கி, இந்த பூஜைக்கு உங்களுடைய அம்மா வரக்கூடாது என்று சொல்ல, எழில் ரொம்பவே பதறினார். பின் அவர் வந்தால் பூஜை நடக்காது என்றார்.
அந்த சமயம் வந்த கோபி, உன்னுடைய அம்மா இங்கே வரக்கூடாது என்று மிரட்ட, எழிலுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் தனியாக சென்று எழில், தன்னுடைய அம்மாவை பற்றியும், அவர் சொன்ன வார்த்தைகளை பற்றியும் நினைத்து புலம்பி அழுதார். அப்போது பூஜைக்கு பாக்கியா வந்தார். உடனே எழில், நீ உள்ளே வர வேண்டாம். கிளம்பி போ என்று சொல்ல, பாக்கியாவுக்கு ஒண்ணுமே புரியவில்லை. பின் எழில், பாக்கியா கையைப் பிடித்து தயவு செய்து நான் வாழ்க்கையில் முன்னேறனும் என்று நினைத்தால் இந்த இடத்தை விட்டு போங்கள் என்று சொல்லி அழ, பாக்கியாவும் மனம் உடைந்து அழுது கொண்டு வெளியே போனார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
மேலும், எழில், தன் படத்திற்கான டைட்டிலில் பாக்கியலட்சுமி என்று வைத்து இருந்தார். அதை பார்த்த உடனே எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், கோபி ஷாக்கி கோபப்பட்டார். பின் எழில், தன்னுடைய அம்மாவை பற்றி ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் பேசி இருந்தார். இதையெல்லாம் வெளியில் நின்று கேட்ட பாக்யா ஆனந்தத்தில் அழுதார். நேற்று எபிசோட்டில் எழில், நீங்கள் நினைத்ததை சாதித்து விட்டீர்கள். என்னுடைய அம்மாவை என் வாயாலேயே வெளியே போன்னு சொல்ல விட்டீர்கள் என்று புலம்பி அழுதார்.
நேற்று எபிசோட்:
அதற்கு கோபி, எவ்வளவு பண்ணாலும் நீ உன்னுடைய அம்மாவை விட்டே தரவில்லை என்று இருவருமே வாக்குவாதம் செய்தார்கள். இன்னொரு பின் வீட்டில் பாக்கியா, ஈஸ்வரிடம் புதிய ஆர்டரை பற்றி பேசி இருந்தார். ஆனால், எழில் பூஜையில் நடந்த விஷயத்தை ஈஸ்வரி கேட்க, அவர் எதுவுமே சொல்லவில்லை. பின் தன்னுடைய மாமியாரை புதிய ஆர்டருக்கு வலுக்கட்டாயமாக ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து வந்தார் பாக்கியா. அங்கு விறுவிறுப்பாக வேலைகள் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றது.
இன்றைய எபிசோட்:
இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று செஃப் ஆனந்த் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் ஈஸ்வரி, பூஜையை நடத்தி எல்லோருக்கு ஆர்டரை செய்ய சொல்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஜெனி- செழியன்- இனியா மூவருமே காரில் பேசிக் கொண்டு வருகிறார்கள். அப்போது செழியன், இனியா இருவருமே எழிலின் பூஜைக்கு பாக்கியா வராததை குறித்து திட்டி கொண்டு வருகிறார்கள். ஆனால், பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து ஜெனி பேசுகிறார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் ஆர்டர் வேலை மும்முரமாக நடக்கிறது. இதை எப்படியாவது சொதப்ப வேண்டும் என்று ஆனந்த் முயற்சி செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
பாக்கியவுடன் மற்ற பெண்கள் எல்லோருமே கண் விழித்து தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஈஸ்வரியும் அவர்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். பின் கோபி, பாக்யா அவமானப்பட்டதை நினைத்து சந்தோஷப்பட்டு ராதிகாவிடம் சொல்கிறார். உடனே ராதிகா, எதற்கு? இந்த கேவலமான எண்ணம் என்று அவரை திட்டி இருந்தார். கோபி, இந்த விஷயத்தில் நீ தலையிடாதே. நான் தவறு ஏதும் செய்யவில்லை என்று அவரை சமாதானம் செய்கிறார். ஆனால், கோபியின் செயலை கண்டித்து ராதிகா சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.