பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அருண் கூறிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஐந்தாவது வாரம் முடிந்து 37 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் என்பதால் ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
பின் நான்காவது வாரம் எலிமினேஷன் நடக்கவில்லை. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். அதில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆவார். தற்போது போட்டியாளர்களுக்குள் சண்டை, போட்டி, பொறாமை, கலாட்டா கலவரம் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், போன வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்கள். பின் ஐந்தாம் வாரத்திற்கான நாமினேஷனில் சுனிதா வெளியேறி இருந்தார். இது பலருக்கும் ஷாக்கிங் தான். இந்த வாரம் கேப்டனாக அருண் பிரசாத் தேர்வு பெற்று இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அருண் பிரசாத் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
My Birthday is fulfilled 🥹
— Archana Ravichandran (@Archana_ravi_) November 11, 2024
Waited till 1.00 AM to watch this😌
Thanks for this wonderful feeling ❤️#captain👑 #wholesome #biggboss8tamil https://t.co/3fwmp81apY
அருண் சொன்ன வாழ்த்து:
அதில் அருண், ஹாய் நான் இந்த வாரம் கேப்டனாக இருக்கிறேன். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். நீ நன்றாக இருப்பாய் என்று நம்புகிறேன். சீக்கிரமாகவே வந்து உன்னை பார்க்கிறேன். உனக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஐ லவ் யூ பாய் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு அர்ச்சனா, நன்றி சொல்லி அருண் பேசிய வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே கடந்த வாரம் விஜய் சேதுபதி, அருண் பிரசாத் உடைய சட்டை நன்றாக வித்தியாசமாக இருக்கிறது. உங்கள் டிசைனர் ரொம்ப நல்லா பண்றாங்க என்று பாராட்டி இருந்தார். அதற்கு அருண் பிரசாத், என்னுடைய பிரண்டு தான் சார் இதை பண்றாங்க.
அருண் பிரசாத் பதில்:
அவர் பெயர் அர்ச்சனா என்று சொன்னவுடன் போட்டியாளர்கள் பயங்கரமாக அவரை கிண்டல் செய்திருந்தார்கள். இதனால் அருண் பிரசாத் ரொம்பவே வெட்கப்பட்டார். உடனே விஜய் சேதுபதி, அதான் எல்லார் முன்பும் சொல்லிவிட்டீர்களே, அப்புறம் என்ன ரகசியம் என்று கலாய்த்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் அருண் பிரசாத், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியிருந்தார். இதன் மூலம் அர்ச்சனா- அருண் காதலிப்பது உறுதியாகி இருக்கிறது. கூடிய விரைவிலேயே இது தொடர்பாக இருவரும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.