திருமணத்திற்கு பின் விக்ரமன்-பிரீத்தி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர். இவர் முதலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். பின் இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது.
இருந்தாலும், இவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். அதன் மூலம் தான் இவர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் விக்ரமன் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.
பிக் பாஸ் விக்ரமன்:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதன் பின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது புகார் அளித்து இருந்தார். அதில் அவர், விக்ரமன் தன்னை காதலிப்பதாக சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்கி என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறி இருந்தார். இது மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது.
விக்ரமன் குறித்த தகவல்:
இதை அடுத்து தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விக்ரமன் பேட்டியில் விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும், விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண் வன்கொடுமை உட்பட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் பின் அந்த பிரச்சனையும் முடிந்துவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் விக்ரமனுக்கு திருமணமாகி இருந்தது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை தான் திருமணம் செய்திருக்கிறார்.
விக்ரமன் திருமணம்:
இவர்களுடைய திருமணம் சென்னையில் எளிமையாக நடைபெற்று இருந்தது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் கலந்து இருந்தார்கள். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு விக்ரமன்- ப்ரீத்தி இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்கள். அதில், விக்ரமனை முதன் முதலாக பார்த்தபோது உங்களுக்கு என்ன தோன்றியது? என்று கேட்டதற்கு அவர், ஒரு ஸ்ட்ரீட் ஆபீஸர் என்று நினைத்தேன். ஆனால், காலப்போக்கில் அந்த எண்ணம் மாறியது. விக்ரமன் அரசியலில் அதிக நேரம் செலவழிக்கிறார்.
விக்ரமன்- ப்ரீத்தி பேட்டி:
என்னுடன் அதிக நேரத்தை செலவிட்டால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறேன். நாங்கள் ஐரோப்பா டூர் போக வேண்டும் என்று எனக்கு ஆசை என்று கூறியிருந்தார். அதற்குப்பின் விக்ரமனிடம் கேட்டபோது, ப்ரீத்தி சேலையை விட மர்டன் டிரஸ்ஸில் தான் அழகாக இருக்கிறார். அவர், என்னை வா போ என்று செல்லமாக அழைப்பது ரொம்ப பிடிக்கும் என்று இருவரும் க்யூட்டாக பதில் அளித்து இருக்கிறார்கள்.