ஐஸ்வர்யாவுக்கு ஓட்டுபோட்டது மக்கள் இல்லை..! இவர்கள் தான்..! கிழித்த பிக்பாஸ்-1 போட்டியாளர்

0
79
Aishwarya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்ற வாரம் எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யா காப்பாற்றபட்டுவிட்டார் என்ற செய்தி தான் தற்போது பிக் பாஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய விவாதமாக இருந்து வருகிறது. இதில் ஐஸ்வர்யா காப்பாற்றபட்டத்திற்காக கமல் கூறிய காரணத்தை தான் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதே போல, ஐஸ்வர்யா காப்பற்றபட்டதும் கமல் சில கண் துடைப்பு காரணங்களையும் கூறிய கமல், ஐஸ்வர்யாவிற்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்ததாக ஒரு வாக்களிப்பு விவரத்தையும் காண்பித்து இருந்தார். இதனால் கமல் மீதும் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதும் பல்வேறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல், கமல் அவர்களை மக்கள் குறை கூறுவது நியாயமில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தது. இதற்கிடையே நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் காண்பிக்கபட்ட அந்த வாக்களிப்பு விவரம் குறித்த பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட காஜல், பிக் பாஸ் குறித்து சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், பிக் பாஸ் டீம வெச்சி அவங்களே கூட வோட் போடலாம். சில கணினியை பயன்படுத்தி அதன் மூலமும் அவங்களாள வோட் விழவைக்க முடியும் .ஆனா இது கண்டிப்பா அவங்களே வோட் போட்டிருக்காங்கலே தவிர மக்கள் போட்ட வோட் இல்ல என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற வாக்களிப்பில் ஐஸ்வர்யாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகி இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளமால் இருந்து வருகின்றனர். இதனால் பிக் பாஸ் ஏமாற்று வேலைகளை செய்து வருகிறார் என்றும் குறை கூறி வருகின்றனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல், பிக் பாஸ் நிகழ்ச்சி வாக்களிப்பில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக கூறியுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான நம்பகத்தன்மையை முற்றிலும் குறைத்துள்ளது.

Advertisement