பிரதமர் ஏன் தமிழ்ல பேசல- விமர்சித்த குஷ்பூ. ‘ஜோக்கர்’ என்று பதிலடி கொடுத்த பிக் பாஸ் நடிகை.

0
2064
modi
- Advertisement -

கொரோவினால் ஒட்டுமொத்த உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281 ஆகவும், 2,415 பேர் பலியாகியும் உள்ளார்கள். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இன்னும் ஒரு சில நாட்களில் ஊரடங்கு முடிய இருக்கும் நிலையில், நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உரையாடினார். இந்த உரையாடலின் போது நான்காம் கட்ட ஊரடங்கு குறித்தும் பேசி இருந்தார். மோடியின் இந்த பேச்சை நடிகையும் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்த குஷ்பூ தொடர்ந்து கிண்டலடிக்கும் விதத்தில் ட்வீட் செய்திருந்தார்.

- Advertisement -

அதில் ஒரு டீவீட்டில், எனக்கு ஒரு சந்தேகம். பாரத பிரதமர் நேத்து எந்த மொழில பேசுனர் ? என்னை மட்டும் சர்வதேச சமூக வலைத்தளமான ட்விட்டரில் தமிழில் தான் பேச வேண்டும் என்று சில கோமாளிகள் கூறுகிறார்கள். அப்போ பிரதமரும் தமிழில் தானே பேச வேண்டும். அது தானே பழமையான மொழி. ஏன் இந்தியில் பேசினார் ? என்று ட்வீட் செய்து இருந்தார்.

குஷ்பூவின் இந்த பதிவை சமூக வலைதளத்தில் ஆதரித்தும், விமர்சித்தும் வந்த நிலையில் நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், குஷ்பூயின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்வீட் செய்திருந்தார். அதில் ‘ஜோக்கர், நீ தங்கிலீஷ்ஷில் டைப் செய்வதற்கு பதிலாக தமிழில் டைப் செய். பிரதமரின் உரை தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தான் ‘என்று குறிப்பிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

-விளம்பரம்-
Advertisement