0
965
Julie
- Advertisement -

-விளம்பரம்-

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் நல்ல பெயர் எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பெயரை நாறடித்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் என்ன செய்தாலும் அது கேலி கிண்டலுக்கு உள்ளாகி வந்தது. ஆனால், அதை எதை பற்றியும் கவலை படாமல் இருந்த ஜூலி டிவி நிகழ்ச்சிகள் தொடங்கி சினிமா வரை சென்று விட்டார். 

- Advertisement -

விமல் நடிப்பில் வெளியான ‘மன்னர் வகைரா’ படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த ஜூலி அதன் பின்னர் உத்தமி, அம்மன் தாயி, அனிதா எம் பி பி எஸ் போன்ற பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். சமீப காலமாக ஜூலி என்ன பதிவை போட்டாலும் சரி அதற்கு வரிந்து கட்டிக்கொண்டு ட்விட்டர் வாசிகள் கமன்ட்களை அள்ளி வீசிவிடுகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஜூலி ஒரு குட்டி பூனை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதற்கு ஒரு கதையும் சொல்லி இருந்தார். அந்த பூனை தனது அலமாரியில் இருந்தது அதனை எடுத்து நான் அதன் தாயிடத்தில் சேர்த்து விட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த கதையை ஜூலி வெறியர்கள் நம்பி அவருக்கு பாராட்டு மழை பெய்தாலும். ஒரு சிலர் ஜூலி சொல்லும் கதையை நம்பத்தயாராக இல்லை. அப்புறம் என்ன வழக்கம் போல ஜூலியை பொய் புலவர் என்றும், விளம்பர விரும்பி என்றும் சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement