38 வயதில் திருமணமா..? கல்யாணம் பற்றி முதல் முறையாக பேசிய மும்தாஜ்..! என்ன சொன்னார் தெரியுமா.?

0
128
Marriage
- Advertisement -

நடிகை மும்தாஜ். மாடலிங் துறையில் இருந்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ‘மோனலிசா என் மோனாலிசா’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.தனது கவர்ச்சியான தோற்றத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களின் ஈர்த்த மும்தாஜிற்கு தென்னிந்தியாவில் ஏக வரவேற்ப்பு இருந்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

mumtaj

சிக்கென இருந்தவர் உடல் பெருத்து குண்டானார். படிப்படியாக படவாய்ப்புகள் குறைந்தன. பிறகு, சில  B கிரேடு படங்களிலும் நடித்தார்.அதன் பிறகு  ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் ஐட்டம் நடிகையானார். 37 வயது நிறைந்திருக்கும் இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதனால், மார்கெட் இழந்த நடிகைகள் போல தானும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்சிகலில் பங்குபெற்றார். இறுதியாக விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மும்தாஜிற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு விழாவை கூட கொண்டாடினர். மேலும், பல போட்டிகளிலும் பங்குபெற்று வருகிறார் நடிகை மும்தாஜ். இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த மும்தாஜிற்கு விரைவில் திருமணம் ஆக உள்ளது என்ற செய்தி தீயாக பரவி வந்தது கடந்த சில நாட்களாக பரவி வந்தது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மும்தாஜிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை நீங்கள் மறக்காத விஷயம் எது என்று கேள்வி கேட்கப்பட்டது.

mumtaj

அதற்கு பதிலளித்த நடிகை மும்தாஜ், எனக்கு பேமிலி வீக் தான் மிகவும் பிடித்திருந்தது. விஜியின் மகன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அப்போது கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று எனது வீட்டில் உள்ள குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.விஜயின் குழந்தை நிலன் பிக் பாஸ் வீட்டில் நடந்த போது அவனை கண்டு எனக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. எனக்கு அப்போது விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் தோன்றியது என்றார். பின்னர் திருமணம் குறித்து ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று கேட்டதற்க்கு , திருமணம், குழந்தைகள் பற்றி பேசிக்கொண்டிருந்த மும்தாஜ் இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை நான் ஏதோ உலருகிறேன் என்று மழுப்பிவிட்டார்.

Advertisement