அச்சு அசல் ரைஸா போல் இருக்கும் நடிகை.! டூ-பீஸ் உடையாள் குழப்பம்.! புகைப்படம் இதோ.!

0
61
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்றுமொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன், ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஜாலியான பேர்வழியான ரைசா, சமீபத்தில் ஒரு சில மோசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

- Advertisement -

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரைசா, சமீபத்தில் பிரபல மாக்சிம் பத்திரிகை அட்டை படத்திற்கு பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைபடம் ஒன்று வெளியாகி ரைசா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், ரைசா என்று நினைத்து அந்த அப்புகைப்படத்தை கூர்ந்து பார்த்த பிறகுதான் அது ரைசா இல்லை என்பது தெரிந்தது. அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை பிரபல மாடல் அழகியும், நடிகையுமான நேஹா ஷர்மா என்பது தெரியவந்தது. இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜூங்கா’ படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement