பிக்பாஸ் 2 சீசனில் இந்த ரெண்டு பேரு இருக்காங்களா..? அப்போ சண்ட இருக்கு..! புகைப்படம் உள்ளே

0
1047
bigg-boss
- Advertisement -

கடந்த ஆண்டு தெலுங்கின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கு நடிகர் ஜூனியர் என். டி. ஆர் தொகுத்து வழங்கினார். தற்போது அடுத்த மாதம் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தெலுங்கில் தொடங்கவுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நாணி தொகுத்து வழங்க போகும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பட்டியல் நேற்று வெளியாகின. அதில் சில மாதங்களுக்கு தெலுங்கு சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி பங்கு பெற உள்ளார்.

bigg boss season 2

இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

- Advertisement -

மேலும் தெலுங்கு சினிமாவை சார்ந்த காமெடி நடிகர் விவா ஹரிஷ், தன்னிடம் ஆபாசமாக வாட்ஸ் ஆப்பில் பேசிய உரையாடலையும் அவர்களுக்கு அனுப்பிய புகைப்படங்களையும் ஆதாரத்துடன் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sri reddy

viva harish

இந்நிலையில் இவர்கள் இருவருமே அடுத்த மாதம் நடக்கவுள்ள தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். ஏர்கனவே சர்ச்சையான விவகாரத்தில் சிக்கிய இவர்கள் இருவரும் தற்போது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றால் என்னென்ன சர்ச்சைகள் கிளம்பும் என்று தெலுங்கு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Advertisement