கொள்கையை மீறி தாலி காட்டியது ஏன்? விக்ரமன் சொன்ன அடடே விளக்கம்

0
152
- Advertisement -

தனது கொள்கையை மீறி தாலி கட்டியது குறித்து பிக் பாஸ் விக்ரமன் அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர். முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். பின், கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகுதான் விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருந்தார். ‌ அதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் 6 நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் விக்ரமன் தனக்கு என ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் விக்ரமன்:

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது தன்னை காதலித்து பணத்தை ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். பல சர்ச்சைகளுக்கு பின் அந்தப் பிரச்சனையில் இருந்து விக்ரமன் வெளிவந்தார். சூழ்நிலை இப்படி இருக்க சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் சென்னையில் எளிமையாக நடைபெற்றுள்ளது. ப்ரீத்தி கரிகாலன் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது திருமணம் இரு வீட்டார் முறைப்படியும் நடத்தப்பட்டது.

விக்ரமன் திருமணம்:

இந்நிலையில் தனது கொள்கையை மீறி தாலி கட்டியது குறித்து விக்ரமன்- ப்ரீத்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்கள். முதலில் பேசிய ப்ரீத்தி, எங்கள் திருமணம் இரு வீட்டாரின் முறைப்படியும் நடந்தது. இந்து முறைப்படி நடக்கணும், தாலி கட்டியாக வேண்டும் என்று அவர் எதுவும் சொல்லவில்லை. தாலி கட்டிக்க வேண்டும் என்பது பர்சனல் ஆக என்னுடைய ஆசை. எனக்கு டீன் ஏஜ்ல இருந்து, தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என்பது உள்ளுக்குள்ள இருந்த சின்ன ஆசை. கிறிஸ்டியன்ஸும் தாலி கட்டுவார்கள். நான்தான் அவர்கிட்ட மோதிரமும் மாத்திக்கலாம் தாலியும் கட்டிக்கலாம் என்று சொன்னேன்.

-விளம்பரம்-

விக்ரமன் பேட்டி:

அதற்கு அவர், கண்டிப்பாக தாலி கட்ட வேண்டுமா என்று கேட்டார் என்று கூறினார். அதை தொடர்ந்து பேசிய விக்ரமன், முதலில் தாலி கட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு என் மனைவி அதைப் பற்றியே பேசிட்டு இருந்தாங்க‌. அப்ப கூட நான் கல்யாணம் பண்ணிட்டு வந்து ரூம்ல வைத்து தாலி கட்டிவிடுகிறேன் என்று கூட சொன்னேன். என் கொள்கைக்கு மாறாக தாலி கட்டியது கொஞ்சம் நெருக்கடியாக தான் இருந்தது. ஆனால், கூட இருக்கவங்களுக்காக சில விஷயங்களை நாம் மாத்திக்க வேண்டும்.

விக்ரமன் அளித்த விளக்கம்:

அப்படி இல்லாம, நாம் சொல்வது தான் கரெக்ட் என்று இருந்தோம் என்றால் நல்லா இருக்காது. அவங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் அவங்களுக்காக சில விஷயங்களை நாம் விட்டுக் கொடுக்க வேண்டும். ப்ரீத்தியை பொறுத்தவரையில் தாலிக்கடிக்க வேண்டும் என்பது ஒரு விருப்பம். அதை நாம் மதிக்க வேண்டும். அதுதான் உண்மையில் ஒரு பகுத்தறிவாக இருக்க முடியும். தாலியை அவங்க காதலின் வெளிப்பாட்டாக பார்க்கிறாங்க. அதனால் தான் தாலி கட்டினேன் என்று விக்ரமன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement