‘பிளாக்’ படத்தின் கிளைமாக்ஸ் குறித்து ‘ஜமா’ பட இயக்குனர் பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஜீவா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் பிளாக் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோகி, சாரா ஷியாம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். மேலும், படத்தில் சென்னையில் உப்பளப்பாக்கம் பகுதியில் வங்கி இருக்கும் தங்களுடைய புதிய வீட்டிற்கு ஜீவா-ப்ரியா பவானி சங்கர் தம்பதியினர் வருகிறார்கள்.
அது கடற்கரைப் பகுதியில் இருக்கும் வீடு. அங்கு இவர்கள் தங்களுடைய விடுமுறை நேரத்தை செலவிட வருகிறார்கள். அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. ஆனால், யாருமே அந்த வீடுகளில் குடியேறவில்லை. பின் அங்கு பல மர்மமான நிகழ்வுகள் நடக்கிறது. உடனே அங்கிருந்து தப்பி செல்லலாம் என்று இருவருமே நினைக்கிறார்கள்.ஆனாலும், ஒரே இடத்துக்கு மீண்டும் மீண்டும் இருவரும் வருகிறார்கள். அவர்களைப் போலவே சில உருவங்களும் அங்கே உலவி கொண்டிருக்கிறது.
பிளாக் படம்:
இறுதியில் ஜீவா-ப்ரியா பவானி சங்கர் தம்பதி தப்பித்தார்களா? இதற்கு காரணம் என்ன? அங்கு என்ன மர்மம் நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை. இந்த படம் முழுக்க முழுக்க 2013 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘கோஹரன்ஸ்’ என்ற படத்தினுடைய ரீமேக் தான். சில மாற்றங்களுடன் இந்த படத்தை தமிழில் இயக்குனர் வெளியிட்டு இருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், ஒரு சிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் புரியவில்லை என்றும் லாஜிக் இல்லை என்றும் விமர்சித்து வருகிறார்கள்.
#BLACK Climax Explained by Director!!
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 10, 2024
(spoiler)
pic.twitter.com/w06LB9JOyH
கிளைமேக்ஸ் காட்சிகள்:
இந்நிலையில் சமீபத்தில் நடந்த, கலாட்டா பிளஸ் அறிமுக இயக்குனர்கள் வட்ட மேஜை 2024 நிகழ்ச்சியில் ‘ஜமா’ படத்தின் இயக்குனர் பாரி இளவழகன் ‘பிளாக்’ படத்தின் கிளைமாக்ஸ் குறித்து பேசியுள்ளார். அதில், பிளாக் படத்தின் கிளைமாக்ஸில், பிரசன்னா ஏதாவது ஒரு டைம் லைனில் தான் இருக்க முடியும் என்று சொல்லிவிடுகிறார். எந்த டைம் லைன் பெஸ்டா இருக்கும் என்று டிசைட் பண்ணிக்கோ என்ற மாதிரி சொல்லிடுவாரு. அப்பதான் ஜீவா போயிட்டு ஒவ்வொன்னா டிசைட் பண்றாரு. முதலில் போனா அப்பதான் நான் பிரக்னட்டா இருக்கேன் என்று பிரியா பவானிசங்கர் சொல்றாங்க. இங்க கொன்றோம் என்றால் நம்ம மனைவிக்கு ஆபத்து என்று சொல்லிட்டு விட்டுடறாரு.
அறிமுக இயக்குனர்கள் வட்ட மேஜை 2024 :
அடுத்து வர சூழ்நிலையிலும் அவரால் கொலை பண்ண முடியாது. எந்த டைம் லைன் என்று யோசித்து கொண்டே இருக்கும் போது தான், திடீரென்று அவங்க மனைவி தேடி வந்த உடனே ஓகே இது தான் தற்போதைய டைம் லைன் போல இருக்கு என்று நினைத்துக் கொள்கிறார். அப்புறம் கார்ல போகும்போதுதான், நீ காணாம போயிட்ட என்பது போல ட்விஸ்ட் வருது. அப்போ இன்னொரு அட்வான்டேஜ் என்ன என்றால் இவர் ஏமாற்றியது அவங்களுக்கு தெரியவில்லை. அப்பதான் அவங்க பெட்ரோல் பங்க் போறாங்க. அவருக்கு எல்லாமே தேஜா ஊ ஆக தெரிகிறது. அதனால அந்த பெட்ரோல் பங்கும் தேஜா ஊ ஆக இருந்திருக்கும்.
ஜமா பட இயக்குனர்:
அதாவது இந்த இடத்திற்கு நான் ஏற்கனவே போயிருக்கேனே என்று அவருக்கு தோன்றி இருக்கும். அங்க உள்ளே போயிருப்பாரு, பிரியா பவானி சங்கரும் ஜெனரேட்டர் ஆன் பண்ண போனவன் காணோம் என்று சொல்லியிருப்பாங்க. அதனால ஜெனரேட்டர்க்கு டீசல் வாங்க வந்திருக்கான், அதனால உள்ள இருக்கான். அப்போ இவருக்கு என்ன அட்வான்டேஜ் என்றால் அவங்க மனைவிக்கும் இவரு ஏமாற்றியது தெரியாது. அதனால உள்ள இருக்கவனை கொன்னுட்டு, இந்த டைம் லைன்ல உட்கார்ந்திடுவோம். இதுதான் கரெக்டான டைம் லைன் என்று அவன் அங்கு உட்கார்ந்துட்டான் என்று நான் நெனச்சேன். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சூப்பராக செமையாக இருந்தது என்று பிளாக் படத்தை புகழ்ந்திருந்தார்.