ஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை! புகைப்படம் உள்ளே

0
2525
Actress Catherine Tresa
- Advertisement -

நடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா, அதர்வா போன்றவர்களுடனும் நடித்து விட்டார்.

2010 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘ஷங்கர் ஐ .பி.எஸ்’ என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் கேத்ரின் தெரசா. அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு,தமிழ் என்று பல மொழி படங்களில் நடித்துவருகிறார். படங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் தமிழில் வெளியான ‘கலகலப்பு 2’ படத்திலும் கவர்ச்சி காட்டி அசத்தினார்.

- Advertisement -

மேலும், தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்களே அதிகம். காரணம், அங்கு அம்மணி கவர்ச்சிக்கு கண்டிஷன் ஏதும் இல்லாமல் நடித்து கொடுப்பார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடித்துள்ள ‘கவுதம் நந்தா’ என்ற படத்தில் நீச்சல் உடை அணிந்து ஒரு காட்சியில் நடித்துள்ளார். ஆனால், தணிக்கை குழுவே அந்த காட்சி படு கவர்ச்சியாக இருந்தது என்று நீக்கி விட்டனர்.

Catherine-Tresa

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ‘பிலிம் பேர்’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகை கேத்ரின் தெரசா. அந்த விழாவில் படு கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்து வந்த கேத்ரினை பார்த்து அனைவரும் வாய் பிளந்தனர்.தற்போது அந்த புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement