மெகா சீரியல் ஆர்டிஸ்ட் கூட தோத்துட்டாங்க போங்க..! கிண்டல் செய்த பிரபல காமெடி நடிகர்

0
52
bigg-boss
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் 2 மக்கள் மத்தியில் அபிமானத்தை பெறவில்லை. இதனால் மக்களின் பல்வேறு விமர்சனங்களை “பிக் பாஸ் 2” பெற்று வருகிறது. இதனால் பிரபலங்கள் சிலர் இந்த நிகழ்ச்சியை கலாய்த்து அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதிலும் காமெடி நடிகர் சதீஷ் இந்த நிகழ்ச்சியை தவறாமல் கண்டு கழித்து அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மெகா சீரியல் நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ள சதீஷ் “மெகா சீரியல் ஆர்ட்டிஸ்ட் தோத்துட்டாங்க போங்க ” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் “ஃப்ரீஸ் டாஸ்க்” நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து வருகின்றனர். ஏற்கனவே போட்டியாளரின் அணைத்து குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றுவிட்டனர்.

bigg-boss-tamil-2

70 நாட்களுக்கு மேலாக தங்களுது குடும்பங்களை பிரிந்து வாடும் போட்டியாளர்கள் தங்களது குடும்ப நபர்களை கண்டதும் மிகவும் உணர்ச்சி வசபட்டு கண்ணீர் விட்டு அழுது விடுகின்றனர். அதிலும் எந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்தாலும் மும்தாஜ் தேம்பி தேம்பி அழுது விடுகிறார். இதனால் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் போது ஏதோ விக்ரமன் படத்தை பார்ப்பது போல தான் இருக்கிறது. இதனை குறிப்பிட்டே நடிகர் சதீஷ் இப்படி ட்வீட் செய்துள்ளார் என்று நன்றாக தெரிகிறது.

Advertisement