‘பார்க்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கதாநாயகியை வர்ணித்து இயக்குனர் பேரரசு பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஈ.கே.முருகன் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் பார்க். இந்த படத்தை அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ.நடராஜ் என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்தினுடைய இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது.
இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம் புலி, சரவணா சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு, இப்போதெல்லாம் இயக்குனர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிவிட்டார்கள். இங்கு வந்திருக்கும் ஆர்.வி.உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லோருமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விழாவில் பேரரசு சொன்னது:
மேலும், இந்த படத்தில் பாடலை எழுதி இருப்பவர் இராசா. அவருடைய பாடல்களை எல்லாம் பார்க்கும்போது இனி அவர் தான் மன்மதராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார். நாங்கள் எல்லாம் 2 மணி நேரம் மூச்சு முட்ட கதையை சொல்லுவோம். ஆனால், இப்போதெல்லாம் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளர்களை சம்மதிக்க வைத்து விடுகிறார்கள். இங்கே கதாநாயகி ஸ்வேதாவை பார்த்தேன். அவர் கொழு கொழு என்று இருக்கிறார்.
நடிகைகள் குறித்து சொன்னது:
அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்களெல்லாம் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகு சிம்ரன், திரிஷா என்று ஒல்லியாக இருந்தார்கள். கொழு கொழு என்று இருந்தாலே மக்களுக்கு பிடிக்கும். இந்த கதாநாயகி சுவேதா அப்படித்தான் இருக்கிறார். சினிமாவில் இயக்குனருக்கு கதை பிடிப்பும், கதாநாயகிக்கு தசை பிடிப்பு ரொம்ப முக்கியம் அதே போல் இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக கன்னடத்து பைங்கிளி.
கதாநாயகி குறித்து சொன்னது:
அவர் தமிழை கொஞ்சி கொஞ்சி பேசி இருக்கிறார். கேட்பதற்கே அழகாக இருந்தது. நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜா தேவியை எல்லாம் கன்னடத்து பைங்கிளி என்று தான் நாங்கள் எல்லாம் கொண்டாடினோம். அதே போல் உங்களையும் வரவேற்போம் என்று கதாநாயகிகளை குறி வைத்தே பேசியிருந்தார். தற்போது இவர் பேசியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
பேரரசு குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டுமில்லாமல் பேரரசு படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா கலந்து இருக்கும். சமீபகாலமாக இவருடைய படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. ஆனால், இவர் நிறைய பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார்.