நடிகர் நகுலின் முகத்திரையை இயக்குனர் சந்துரு கிழித்து எறிந்து இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நகுல். சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பின் இடையில் இவருக்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நகுல் நடிப்பில் வெளியாகி இருந்த படம் வாஸ்கோடகாமா.
இந்த படத்தை இயக்குனர் ஆர்.ஜி.கிருஷ்னன் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் வம்சி கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இந்த நிலையில் இந்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி இருந்த ஏ.எம். சந்துரு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. அதில் அவர், நான் வாஸ்கோடகாமா படத்தில் அசோசியேட் இயக்குனராக இரண்டு வருடம் வேலை செய்தேன்.
இயக்குனர் சந்துரு பேட்டி:
கடைசி 10 நாள்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு என்னை கூப்பிடவே இல்லை. என்னை வேலை செய்யவும் விடவில்லை. ஆடியோ லான்ச் நான் வர முயற்சி செய்தும் என்னை வரவிடாமல் தடுத்து விட்டார்கள். படம் ரிலீசான பிறகு அந்த படத்திலேயும் என்னுடைய பெயர் வரவில்லை. இதற்கெல்லாம் காரணம் நகுல் தான். ஏன்னா, ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டில் நகுல், என்னை காண்டம் வாங்கி வர சொன்னார். அப்போது நான், நிறைய வேலை இருக்கு. இயக்குனர் திட்டுவார். சில மணி நேரம் கழித்து வாங்கி வந்து தருகிறேன் என்று சொன்னேன். உடனே அவர், ரொம்ப அர்ஜென்ட் வாங்கிட்டு வா என்று சொன்னார்.
நகுல் குறித்து சொன்னது:
நான் எனக்கு வேலை இருக்கு, முடியாதுன்னு சொல்லி சென்று விட்டேன். அப்போது இது பிரச்சனையாகது, சுமூகமாக முடிந்து விடும் என்று நினைத்து கிளம்பிவிட்டேன். பின் 10 நாள் கழித்து நகுல், வாஸ்கோடகாமா படத்தின் இயக்குனரிடம் அசோசியேட் இயக்குனர் சந்துரு எனக்கு கதை சொல்லி டார்ச்சர் செய்கிறார். ரொம்ப தொல்லை கொடுக்கிறார். அவர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் நான் வரமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அதனால் என்னை இயக்குனர் கடைசி 10 நாட்கள் படத்திற்கு கூப்பிடவே இல்லை.
Shocking allegations against Actor #Nakkhul by an associate director 😨.. Are you serious???
— sherif vijay (@VijaySherif) August 21, 2024
pic.twitter.com/QD6khRQOFf
சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது:
இசை வெளியீட்டு விழாவிலும் நான் வர முயற்சி செய்தேன். ஆனால், என்னை வரவிடாமல் தடுத்து விட்டார்கள்.படம் ரிலீஸ் ஆன பிறகு படத்திலுமே என் பெயர் வரவில்லை. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தோட ஹீரோயினியாக நடிக்க இருந்தது பிரகிடா தான். இவர் எப்போதுமே சூட்டிங் ஸ்பாட்டுக்கு அவருடைய அப்பாவோடு தான் வந்தார். அது நகுலுக்கு பிடிக்கவில்லை. காரணம், இவங்க அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண மாட்டாங்க, செட் ஆகாது என்று இயக்குனரிடம் நகுல் சொல்லி இருந்தார். இயக்குனரும் இதை பிரகிடாவிடம் சொல்ல தயங்கி படத்திலிருந்து தூக்கி விட்டார்.
சுனைனா குறித்து சொன்னது:
அதன் பின் நகுல், சுனைனா தான் இதற்கு சரிப்பட்டு வருவார். அவரை இந்த படத்தில் ஹீரோயினியாக போடுங்க என்று கேட்டார். ஆனால், இயக்குனருக்கு சுனைனாவை கதாநாயகியாக போட பிடிக்கவில்லை. அதனால் தான் படத்தினுடைய பூஜைக்கு நகுல் வரவே இல்லை. இதற்கு முன்பு சுனைனா உடன் நகுல் நடித்திருந்தார். அதனால் தான் இந்தப் படத்திலும் அவர் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணுவார் என்ற எண்ணத்தில் சொல்லியிருந்தார். இந்த பிரச்சனைக்கெல்லாம் நான் தான் ஆதாரம். ரெண்டு வருஷமா நான் அவர்களுடன் வேலை செய்திருக்கிறேன். எனக்கு சம்பள பாக்கி கொடுக்கவில்லை. ஒன்னுமே இல்லாத விஷயத்திற்காக என்னை படத்தை விட்டு தூக்கும் போது அவர்கள் செய்த பெரிய தப்புகளை எல்லாம் வெளியில் கொண்டு வருவேன். போலீஸ், கோர்ட் என்று போனாலும் நான் வெளிப்படையாக பேசுவேன். என் பக்கம் நியாயம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.