எப்படி இருந்த டிஸ்கோ சாந்தி இப்போ இப்படி ஆயிட்டாங்க ! புகைப்படம் உள்ளே

0
3877
disco-santhi-actress
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் டிஸ்கோ சாந்தி. இவர் தமிழ் நடிகர் சி.எல் ஆனந்தனின் மகள் ஆவார். டிஸ்கோ சாந்திக்கு ஒரு அக்கா இரண்டு தங்கை மற்றும் 3 தம்பிகள் உள்ளனர். தனது தந்தை ஒரு நடிகராக இருந்தாலும் பெரிய குடும்பம் என்பதால் சிறு வயதில் இருந்தே இவர்கள் வறுமையில்தான் இருந்துள்ளனர்.
Disco Shantiசற்று வளர்ந்தவுடன் அக்கா லலிதா குமாரி நடிக்க சென்றுவிட்டார். அதன் பின்னர் தானும் நடிக்க போவதாக டிஸ்கோ சாந்தி களத்தில் இறங்கினார். தமிழில் உதய கீதம் படத்தில் அறிமுகம் ஆனார். இந்த வேளையில் அவரது தந்தை சி.எல் ஆனந்தனுக்கு மஞ்சள் காமாலை நோய் தக்கியது.

இதனால் அவரையும் பார்த்துக்கொண்டு நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார் டிஸ்கோ சாந்தி. முதல் படத்தில் நல்ல ரோலில் நடித்த சாந்திக்கு அதன் பின்னர் கிளாமர் ரோல்களாக வந்தது. தந்தையின் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் வேறு வழியின்று கிளாமர் ரோலில் நடித்தார். அதன் பின்னர் தான் அவருக்கு ஐட்டம் டான்ஸ் வாய்ப்புகள் வர துவங்கின.
disco shanthiவேறு வழி இன்று அனைத்து படங்களிலும் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஐட்டம் டான்ஸ் ஆடினார். என்ன சம்பாரித்தும் சாந்தியின் தந்தையை காப்பாற்ற முடியவில்லை. மஞ்சள் காமாலை நோய் தீவிரமாக தாக்க அவர் இறந்து போனார்.

இந்நிலையில் 1996ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருந்தும் சாந்தியை துயரம் விடவில்லை. நிம்மதியான வாழ்க்கை அவருக்கு கிடைக்கவில்லை. அவரது மகள் சிறு வயதிலேயே நோய்வாய்பட்டு இறந்து போனார்.
shanthiஅதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு அவரது கணவர் ஸ்ரீஹரியும் இறந்து போனார். அதன் பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு சமூக சேவையில் இறங்கினார் டிஸ்கோ சாந்தி. தனது அக்ஸ்ரா பவுண்டேசன் என்னும் ஒரு சமூக சேவை மையத்தை நடித்தி வருகிறார் சாந்தி. அக்ஸரா பவுண்டேசன் தனது இறந்து போன குழந்தை அக்சராவின் பெயரில் நிறுவப்பட்டதாகும்.

Advertisement