திருப்பதி கோவிலில் ரசிகை ஒருவர் ராதிகாவிடம் எல்லை மீறி நடந்து இருக்கும் செயல் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் தொடங்கி தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.
மேலும், இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார். ராதிகா ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சீரியல்களை ராதிகா தயாரித்து இருக்கிறார். அதோடு பல மெகாஹிட் சிரியல்களையும் தயாரித்த ராதிகா “சித்தி” போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி, செல்வி, அரசி, சித்தி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார் ராதிகா.
ராதிகா திரைப்பயணம்:
சமீபத்தில் தான் ராதிகாவின் சித்தி 2 சீரியல் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். அதுமட்டுமில்லாமல் இவர் ரடான் மீடியா ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் படங்களில் பிஸியாகவும் நடித்து கொண்டு வருகிறார்.
ராதிகா எடுக்கும் சீரியல்:
பின் சமீபத்தில் ராதிகாவின் தயாரிப்பு மூலம் சன் டிவியில் “கிழக்கு வாசல்” என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த சீரியலில் நடிகர் விசு கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட எஸ்.ஏ சந்திரசேகர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சந்திரமுகி 2 படம்:
மேலும், நடிகை ராதிகா தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2ல் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த நிலையில் ரசிகை ஒருவர் ராதிகாவிடம் எல்லை மீறி நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகிக்கிறது. அதாவது, சமீபத்தில் ராதிகா திருப்பதி கோயிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார்.
எல்லை மீறி நடந்த ரசிகை:
பின் அவர் கோவிலை விட்டு வெளியே வரும்போது பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் பலரும் போட்டோ எடுத்திருக்கிறார்கள். ராதிகாவும் பொறுமையாக ரசிகர்களுடன் நின்று சிரித்தவுடன் போட்டோ எடுத்திருக்கிறார். அப்போது ரசிகை ஒருவர் ராதிகாவின் தோள் மீது கை போட்டு போட்டோ எடுக்க பார்த்திருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ராதிகா திரும்பிப் பார்த்து நடந்து சென்றிருக்கிறார். உடனே அங்கிருந்து அவர்கள் தொடாதீர்கள்! தொடாதீர்கள்! என்று சத்தம் போட்டு இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.