போதை பொருள் விவகாரம் – நடிகை நிக்கி கல்ராணி சகோதரி சஞ்சனா கல்ராணி கைது – இன்னும் யார் யார் எல்லாம் மாட்டப்போறாங்களோ.

0
1097
sanjana-galrani

கடந்த சில தினங்களாக கன்னட திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல கன்னட நடிகையும் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் கன்னட சீரியல் நடிகையான அனிகா என்பது தெரியவந்தது.

Sanjana-galrani
சஞ்சனா கல்ராணி

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏராளமான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும்,போதை பொருட்களை கன்னட சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் கூட பயன்படுத்தியதாகவும் கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும் போதை பொருள் பயன்படுத்தும் 15 நடிகர் நடிகைகளில் பெயரையும் அவர் போலீசாரிடம் கொடுத்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.

- Advertisement -

பல்வேறு கன்னட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த போதை பொருள் விவகாரத்தில் தொடர்ப்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும், பல்வேறு நடிகர் நடிகைகளிடம் சோதனை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் தமிழில் நிமிர்ந்த நில் படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ராகினி திவேதி கைது செய்யப்பட்டிருந்தார். அவரை போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கன்னட திரை உலகில் நடக்கும் பார்ட்டிகளுக்கு போதை பொருள் சப்லை செய்யப்படுவதாக தெரியவந்தது.

Bengaluru drug case: Drug parties held in Kochi, more Malayalees likely  involved - KERALA - GENERAL | Kerala Kaumudi Online
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ராகினி திவேதி

இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியும் இந்த போதை பொருள் விவாகரத்தில் சம்மந்தபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. மேலும், அவரையும் கைது செய்து போலீசார் கஸ்டடி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் எந்தெந்த பிரபலங்கள் இந்த சர்ச்சையில் சிக்குவார் என்று கன்னட திரையுலகமே பதட்டத்தில் இருந்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement