ஸ்ரீதேவியின் கணவன் மீது திரும்பும் விசாரணை ! அந்த 15 நிமிடம் – அதிரடியில் துபாய் போலீஸ்

0
8117
sri devi bony-kapoor
- Advertisement -

கடந்த சனிக்கிழமை ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் இறந்து கிடந்துள்ளார் ஸ்ரீதேவி. ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இன்னும் நீடிக்கிறது. முதலில் மாரடைப்புஎன கூறப்பட்டது. தற்போது தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார் என துபாய் போலீஸ் அறிக்கை கொடுத்துள்ளது.

Actress-sridevi

துபாயில் நடவுபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்ள சென்ற ஸ்ரீதேவி விழாவில் கலந்துகொண்ட பின்னர் தனது ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார். ஆனால், உடன் சென்ற போனி கபூர் மும்பை சென்றுவிட்டார்.பின்னர் ஸ்ரீதேவி மரணம் அடைந்து சனிக்கிழமை அன்று மீண்டும் துபாய் சென்றுள்ளார். சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவியை ஹோட்டலில் சந்தித்துள்ளார். 15 நிமிடம் அவரிடம் பேசிய பின்னர் ஸ்ரீதேவி குளியலறை சென்றுள்ளார்.

- Advertisement -

நேரம் ஆகியும் ஸ்ரீதேவி வெளியே வரவில்லை. இதனால் போனி கபூர் கதவை உடைத்து சென்று பார்த்தால் குளியலறையில் இறந்து கிடந்துள்ளார் ஸ்ரீதேவி. அதன்பின்னர் நீண்ட நேரம் கழித்து 9 மணிக்கு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார் போனி கபூர்.

bony kapoor

இந்த சம்பவங்களுக்கு முன்னர் ஸ்ரீதேவியின் ஹோட்டல் அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அதன்பின்னர் போனி கபூர் ஸ்ரீதேபியின் அறைக்கு வந்துள்ளார். இதனால் போனி கபூரிடமும் போலீஸ் விசாரணை வலுப்படுத்தியுள்ளது. விசாரணை முடிந்து மரணம் தெளிவான பின்னர்தான் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா அனுப்பப்படும்.

Advertisement