விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் புதுப்புது வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நடன நிகழ்ச்சி தான் ஜோடி ஆர் யூ ரெடி.
இதற்கு முன்பு டான்ஸ் ஜோடி, ஜோடி நம்பர் 1 என பல நடன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டிருந்தது. தற்போது விஜய் டிவியில் ஜோடி ஆர் யூ ரெடி டிவியில் நிகழ்ச்சி புதிதாக தொடங்கப்பட்டிருக்கிறது. இது ஜோடி நம்பர் 1ன் 11வது பகுதி என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்குகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகை மீனா, ஸ்ரீதேவி விஜயகுமார், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பங்கேற்று இருக்கிறார்கள்.
ஜோடி ஆர் யூ ரெடி:
கடந்த ஜனவரி மாதம் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் 20 திறமையான நடன கலைஞர்களுடன் துவங்கப்பட்டது. இந்த நடன கலைஞர்களுடன் தொலைக்காட்சி பிரபலங்கள் ஜோடியாக நடனம் ஆடுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கான்செப்டில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் தனுஷ்- ஜஸ்டினா தான் டைட்டில் பட்டத்தை வென்றார்கள்.
தனுஷ்-ஜஸ்டினா ஜோடி :
இந்நிலையில் தனுஷ்-ஜஸ்டினா இருவரும் சேர்ந்து பிரபல சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்கள். அதில் அவர்கள், கிட்டத்தட்ட ஆறு, ஏழு வருடமாக இதற்காக நாங்கள் போராடினோம். இது மூன்று மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி கிடையாது, பல வருட போராட்டத்திற்கு கிடைத்த பலன். இதற்கு வரதா அண்ணனுக்கு தான் நன்றி சொல்லணும். இதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கோம். நான் டான்ஸ் ஆட போறேன்னு எங்கள் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பா என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். அவர்கள் முதல் தடவை என் பெர்பார்மன்ஸ் பார்த்து என்னை என்கரேஜ் பண்ணது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
இப்ப உன் பொண்ணு நல்லா பண்றான்னு சொந்தக்காரங்க சொல்வது சந்தோசமாக இருக்குது. டான்ஸ் ஆடி மூக்கெல்லாம் ரெண்டு பேரும் உடைத்திருக்கோம். கப்பை கையில் வாங்கின பிறகு பிறந்த குழந்தையை கையில் வாங்கின மாதிரி தான் உடலெல்லாம் சிலிர்த்தது. செட்டில் எல்லோரும் எங்களுடைய வெற்றியை கொண்டாடுவது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. முதல் ரவுண்டில் இருந்தே கடினமாக உழைத்தோம். இரண்டு பேருக்குள்ள சின்ன சின்ன மனஸ்தாபம் வரும் ஸ்டேஜ் ஏறும் வரைக்குமே சண்டை போட்டு தான் இருப்போம். ஸ்டேஜ் ஏறினால் எல்லாத்தையும் மறந்து நாங்கள் பெர்ஃபார்ம் பண்ண நினைப்போம். உருகி உருகி பாடலுக்கு நாங்கள் ஆடினது பயங்கர ஹிட் ஆனது.
நாங்கள் சர்வே பண்றதுக்கான காரணமே டான்ஸ் தான். பலருமே டைட்டில் வின் பண்ணிட்டாலே, நீ காலி அவ்ளோதான் என்று சொல்றாங்க. எல்லோருடைய மைண்ட் செட்டிலையும் அப்படித்தான் இருக்கு. அந்த மைண்ட் செட்டை உடைக்கணும். பேக்ரவுண்ட் டான்ஸ்ல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். முன்னாடி வருகிறது ரொம்ப நாள் ஆசை. மத்த ஸ்டைலும் கத்துக்கணும்னு ட்ராவல் பண்ண ஆரம்பித்தேன். வரதா மாஸ்டர் இரண்டு பேருக்குமே ஏற்ற மாதிரி ஸ்டெப்ஸ் எல்லாம் சொல்லிக் கொடுப்பார். எங்களை புரிந்துகொண்டு எங்களுக்கு ஏற்ற மாதிரி சொல்லி கொடுத்ததால் தான் எங்களால் கப் வாங்க முடிந்தது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.