ரூ.30 கோடியில் சொகுசு பங்களா ! 8 படுக்கை அறைகள் கட்டிய பிரபல நடிகை ! யார் தெரியுமா

0
2447
Kangana-Ranaut
- Advertisement -

கடந்த 2008ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த படம் தாம் தூம். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் கங்கனா ரணாவத். இவர் அந்த படத்தில் கவர்ச்சியாக நடித்திருப்பார்.

Jayam-Ravi-with-Kangana-Ranaut

தற்போது ஹிந்தி திரையுலகின் நெ.1 நாயகியாக வலம் வரும் இவர் அடுத்தது பல படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை அங்கு பெரிதாக வைத்துள்ளார். நல்ல நடிப்பு திறமை, கவர்ச்சிக்கு பெயர் போனவர். தற்போது குயின் என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அனைவரிடமும் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

மேலும் , இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதும் வசூல் மழையில் நனைந்து வருகிறது இந்த படம். இதனால் தற்போது இவரது சம்பளம் 5 கோடியை தாண்டி சென்றுள்ளது. தற்போது மும்பையில் வசித்துவரும் கங்கனா தனது சொந்த ஊரான ஹிமாச்சலில் 30 கோடி ரூபாய் செலவில் ஒரு பங்களா கட்டியுள்ளார். இந்த பங்களாவில் 8 படுக்கையில் அறைகள் உள்ளன.

மேலும் இந்த பங்களா, குளிர் பிரதேசமான மணாலியில் கட்டியிருப்பதால் அங்கு இருந்து பார்த்தால் இமைய மலையின் எழில் கொஞ்சும் அழகு அற்புதமாக தெரியுமாம்.

Advertisement