தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள்- வருத்தத்தில் கார்த்திகை தீபம் சீரியல் நடிகை சொன்ன விஷயம்

0
130
- Advertisement -

தன்னை பற்றிய வதந்திகளுக்கு கார்த்திகை தீபம் சீரியல் நடிகை கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ், கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடித்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலின் கதாநாயகி ஹர்த்திகா கேரளாவை சேர்ந்தவர். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரைக்கு கால் பதித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், சரியான அங்கீகாரம் இவருக்கு கிடைக்கவில்லை. திரையில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இவர் சின்னத்திரைக்கு வந்தார். அந்த வகையில் இவர் கார்த்திகை தீபம் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

- Advertisement -

ஹர்த்திகா குறித்த தகவல்:

இவர் முதன்முதலாக திரைப்படங்களில் தான் நடித்தார். தமிழில் கதாநாயகியாகவும் இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இவர் நடித்த படங்களில் ஒன்று தான் பிளாக் அண்ட் வொயிட். இந்த படத்தில் ஹர்த்திகாவுக்கு ஜோடியாக கார்த்திக் ராஜ் நடித்திருந்தார். இதை அடுத்து இவர்கள் இருவரும் ஜோடியாக கார்த்திகை தீபம் என்ற தொடரில் நடித்து இருந்தார்கள்.

ஹர்த்திகா திருமணம்:

இதற்கிடையில் கடந்த ஆண்டு நடிகை ஹர்த்திகாவுக்கு திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணம் கேரளாவில் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று கார்த்திகை தீபம் சீரியலில் ஹர்த்திகா இறந்துவிட்டது போல காட்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் தற்போது கார்த்திகை தீபம் சீரியலின் முதல் பாகம் முடிந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

ஹர்த்திகா குறித்த சர்ச்சை:

முற்றிலும் மாறுபட்ட கதைகளத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி இருக்கிறது. மேலும், இந்த இரண்டாவது பாகத்தில் ஹீரோயினி ஹர்த்திகாவை தவிர எல்லோருமே நடிக்கிறார்கள். இதனால் ஹர்த்திக்கா குறித்து சோசியல் மீடியாவில் நிறைய வதந்திகள் வருகின்றது. குறிப்பாக, இவர் திருமணம் ஆனதால் தான் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுக்கிறார். அதோடு தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார். இவருடைய கணவர் நடிக்க கூடாது என்று சொல்லிவிட்டார் என்றெல்லாம் நிறைய வதந்திகள் வந்திருக்கின்றது.

ஹர்த்திகா பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஹர்த்திகா, நான் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்காததால் தான் சீரியலில் இருந்து நீக்கிவிட்டதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அதில் உண்மையே இல்லை. நடிப்பு என்று வந்துவிட்டால் இயக்குனர் சொல்வதைக் கேட்டு தான் ஆக வேண்டும். அதை செய்ய மாட்டேன், இதை செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது. அதேபோல் நான் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி எதுவுமே இல்லை. ஒரு வேலை நான் கர்ப்பமாக இருந்தால் கண்டிப்பாக உங்களிடம் முதலில் சொல்லுவேன் என்று கூறியிருந்தார்.

Advertisement