இந்திக்கு சென்றதும் பார்ட்டி கிளப் என்று ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ்.! இவங்களுமா.!

0
796
Keerthy-Suresh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று அனைவருடனும் நடித்து இவர், தற்போது இந்தி திரையுலகில் அறிமுகமாக இருக்கிறாராம்.

மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்

இந்த படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கான் நடிக்கிறார். இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது. இதில் இரண்டு வேடங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இவர் தற்போது தமிழில் அஜித்குமார் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேசும், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரும் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர்.

அது போக ஜான்வி கபூர் கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகையாம் இதனால் இருவரும் மிகவம் நெருக்கமாகிவிட்டனர். மேலும் இவர்கள் இருவரும் தற்போது பார்ட்டி கிளப் என்று சுற்றி வருகின்றனராம். விரைவில் கீர்த்தியை பிகினி உடையில் பார்த்தாலும் ஆச்சரியமில்லை, ஏன்னா பாலிவுட் சினிமா டிசைன் அப்படி.

-விளம்பரம்-
Advertisement