25 நிமிட வீடியோ காலுக்கு 25 ஆயிரம், மெசேஜ் செய்தாலே திருடப்படும் பணம் ? பணத்தை இழந்து தவிக்கும் followers.

0
197
kiran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் 90ஸ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை கிரண். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை கிரண். இது தான் இவரின் முதல் படம். அதன் பின்னர் அஜித்தின் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’, வின்னர், தென்னவன் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் ர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான். அந்த படத்தில் இடம் பெற்ற பாடலில் கிரண் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார். ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்த படி வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் இவர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : மூன்று முறை வந்த திருமண வாய்ப்பை தவறவிட்டேன்- திருமணம் செய்யாதது குறித்து முதல் முறையாக மனம் திறந்த சுஸ்மிதா சென்

கிரணின் திரைப்பயணம்:

பின் இவர் தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போனார். சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகை கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார். மேலும், இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். அதற்கு பின்னர் அம்மணியை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.

-விளம்பரம்-

கிரணின் andriod app:

இருப்பினும் இவர் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது நடிகை கிரணுக்கு 38 வயது ஆகிறது. ஆனாலும் கிரண் கவர்ச்சியில் சற்றும் குறையாமல் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாலோ செய்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகை கிரண் தனக்கென்று ஒரு andriod app ஒன்றை உருவாக்கி உள்ளார்.

appல் உள்ள சில விஷயங்கள்:

அதில் தனது புகைப்படங்களை விற்று வருகிறார். அதில் 5 நிமிடம் விற்று வீடீயோ காலில் பேச மட்டும் கிட்டத்தட்ட 5000 ரூபாய்யை கட்டணமாக முன் பதிவு செய்ய வேண்டுமாம். இந்நிலையில் நடிகை கிரண் தன்னுடைய appல் சில விஷயங்களை ரசிகர்களுக்காக வைத்திருக்கிறார்கள். அது என்னவென்றால்,

கிரணை மீட் பண்ணி அவர்களை நேரடியாக பார்க்க, ஒரு சில நேரங்களில் அவர்களுடன் செலவு செய்வதற்கு- ரூ. 150000.

பத்து நிமிடம் வீடியோ கால் பேசுவதற்கு – ரூ.15000

கிரணின் இதுவரை வெளிவராத கவர்ச்சி புகைப்படம் வேண்டுமென்றால் – 2000 ரூபாய்

இன்ஸ்டாகிராமில் இல்லாத கண்டன்ட் வேண்டும் என்றால்- நாற்பத்தி ஒன்பது ரூபாய்

கிரண் வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷலான புகைப்படங்கள் வேண்டுமென்றால்- 1000 ரூபாய்

கிரண் உடன் 25 நிமிடம் வீடியோ கால் பேச- 25,000 ரூபாய்

மோசடி புகாரில் கிரண் :

இப்படி ஒரு நிலையில் தற்போது மோசடி புகாரில் சிக்கி இருக்கிறார் கிரண். அதாவது கிரணுடம் மெசேஜில் பேசவே முதலில் 49 ரூபாய் ரேட் கார்டு போட வேண்டுமாம். அவ்வாறு ரேட் கார்டு போட்டு அவருக்கு மெசேஜ் செய்தால் ஒவ்வொரு மெசேஜூக்கு பணம் போய்யுள்ளது. அது மட்டுமல்லாமல் கிரனிடம் வீடியோ காலில் பேச பணத்தை செலுத்திவிட்ட போதிலும் அவர்களுக்கு வீடியோ கால் செய்யாமல் ஏமாற்றி இருக்கிறாராம் கிரண். மேலும், தன்னை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர்களை கிரண் வேண்டுமேன்றே தூண்டி இப்படி பணம் சம்பாதித்து வருவது குற்றம் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Advertisement