எப்படி இருக்கிறது தர்ஷன் – லாஸ்லியா நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’ – முழு விமர்சனம் இதோ.

0
672
google
- Advertisement -

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இருவரின் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் கூகுள் குட்டப்பா. இந்தப் படத்தில் தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா, மாரியப்பன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரித்து நடித்து இருக்கிறார். பொதுவாகவே அறிவியல்பூர்வமான திரைப்படங்கள் தமிழில் வருவது அரிது. அப்படியே அந்த படங்கள் வெளிவந்தாலும் மக்கள் மத்தியில் சில படங்கள் மட்டும் தான் வெற்றி பெறுகிறது. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள கூகுள் குட்டப்பா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’. இந்த படம் பல பிரிவுகளில் விருதுகள் பெற்று இருந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்து நடித்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். படத்தில் சுராஜ் என்ற கதாபாத்திரத்தில் கேஎஸ் ரவிக்குமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன், கதாநாயகியாக லாஸ்லியா நடித்து உள்ளார்கள். கோவை மாவட்டத்தில் தந்தையின் பிள்ளையாக வளரும் ஹீரோ ரோபோட்டிக் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறான்.

- Advertisement -

ஆனால், அவருடைய தந்தை நேர்மாறானவர். அவர் இயற்கையோடு ஒட்டி வாழப் விரும்புபவர். பின் ஹீரோ தன் தந்தையை சமாதானப்படுத்தி ஜெர்மன் செல்கிறார். மேலும், தனிமையில் இருக்கும் தந்தையை கவனிக்க தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு துணையாக தருகிறார். ஆரம்பத்தில் தந்தை அந்த ரோபோவை வெறுக்கிறார். பின் தந்தை ரோபோவின் அன்பில் விழுந்து அதையே தன்னுடைய மகனாக பார்த்து வருகிறார். ஒருநாள் பரிசோதனை முடிந்து அந்த ரோபோவை நிறுவன முதலாளி கேட்கிறார்.

ஆனால், தந்தை ரோபோவை தர மறுக்கிறார். இதை அறிந்த ஹீரோ மீட்க இந்தியா வருகிறார். இறுதியில் ரோபோ என்ன ஆனது? தந்தை விருப்பப்படி ரோபோ தந்தைக்கே சென்றதா? தன் தந்தையுடன் மகன் இணைந்தாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை. தந்தையாக படத்தில் கேஎஸ் ரவிக்குமார் நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் குறை சொல்லாத அளவிற்கு தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதேபோல் மகனாக பிக் பாஸ் தர்ஷன் நடித்திருக்கிறார். இவர் முழு முயற்சி செய்திருந்தாலும் ஆங்காங்கே நடிப்பு எவ்வளவு கிலோ என்பது போல் தெரிகிறது.

-விளம்பரம்-

அதேபோல் படத்தில் நாயகியோடு பங்கு இல்லை என்றாலும் கதைக்கு வைக்க வேண்டுமே என்ற நோக்கில் லாஸ்லியா வருகிறார். ஆனால், அவர் நடிப்பில் தர்ஷனுக்கு பாஸ் என்று சொல்லலாம். மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த படம் தமிழில் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். எளிமையாக முடிக்க வேண்டிய கதையை இரண்டரை மணி நேரம் எடுத்து சென்று இருக்கிறார்கள். இந்த படத்திற்காக இயக்குனர் எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி அடைய வில்லை.

அதுமட்டுமில்லாமல் ரோபோ என்று புதிய கான்செப்ட் காண்பிக்கும்போது அதனுடைய பங்களிப்பை பெரிதாக காட்சி படுத்தவில்லை. பார்ப்பதற்கு அந்த காலத்து தேவர் பிலிம்ஸ் கதை மாறியே தெரிகிறது. இவர்களை அடுத்து யோகி பாபு, பிளாக் பாண்டி, பூவையார் அனைவருமே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கேஎஸ் ரவிக்குமார்- ரோபோ காம்பினேஷன் படத்திற்கு ஆறுதலாக இருக்கிறது. மேலும், காமெடி என்ற பெயரில் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறது. அதிலும் இப்படி ஒரு கிளைமாக்சை தமிழ்சினிமா இதுவரை பார்த்ததே இல்லை.

இனி யாரும் பார்க்கப் போவதும் இல்லை என்பதுபோல காண்பித்திருக்கிறார் இயக்குனர். கதையை நேராக சொல்லாமல் கதாபாத்திரங்களை சுத்தி சுத்தி காண்பித்து கலாய்த்து கொண்டு சென்றிருப்பது ரசிகர்களை சலிப்படைய வைத்திருக்கிறது. மிகப்பெரிய லெஜெண்ட் படத்தை தயாரித்து நடித்து படத்தில் இவ்வளவு குறைகள் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால், ஜிப்ரானின் இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. கதை பார்வையாளர்களின் பொறுமையை மிகவும் சோதித்து இருக்கிறது. மலையாளத்தில் ஹிட் கொடுத்த படம் தமிழில் கை கொடுக்கவில்லை என்று சொல்லவேண்டும். படம் ரொம்ப சுமார் என்றுதான் சொல்லணும்.

நிறைகள் :

இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பு சிறப்பு.

ஜிப்ரானின் பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

ரோபோ கான்செப்டை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

குறைகள் :

கதாநாயகன் நடிப்பை கற்றுக்கொள்ளவேண்டும்.

காமெடி என்ற பெயரில் ரசிகர்களை கடுப்பேற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் கைகொடுத்த படம் தமிழில் ஒர்கவுட் ஆகவில்லை.

ரீமேக் படம் என்பது என்றாலும் கதையில் கொஞ்சம் வித்தியாசம் கொண்டு வந்திருக்கலாம்.

எளிதாக முடிய வேண்டிய கதையை இரண்டரை மணி நேரம் இழுத்து நீட்டி கொண்டு சென்றிருப்பது ரசிகர்களுக்கு சலிப்படைய செய்திருக்கிறது.

மொத்தத்தில் கூகுள் குட்டப்பா– எல்லாம் செட்டாப்பா

Advertisement