நான் சொல்லிட்டேன், ஆனா நிறையே பேர் வெளிய சொல்லல – நயனுடனான பிரச்சனை குறித்து மம்மதா

0
207
- Advertisement -

பிரபல தென்னிந்திய நடிகை மம்தா மோகன்தாஸ் சமீபத்தில்அளித்த பேட்டி தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மம்தா தமிழில் விஷால் நடித்த ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி போன்ற படங்களிலும் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இவர் ‘மகாராஜா’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் மீண்டும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தந்துள்ளது.

-விளம்பரம்-

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சினிமா துறையில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ் தெலுங்கு மலையாளம் என எல்லாம் மொழிகளிலும் பின்னணி பாடகாரக பணியாற்றியவர் மம்தா மோகன்தாஸ். மம்தாவிற்கு பிரகதீப் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் திருமணமான சில மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மம்தா பேட்டி:

சமீபத்தில் அளித்த பேட்டியில் மம்தா, குசேலன் படத்திற்காக வேறு ஒரு படத்தின் ஷூட்டிங் நிறுத்திவிட்டு நான் சென்றேன். நான் அங்கிருந்த நான்கு நாட்களில் மூன்று நாட்கள் சூட்டிங் நடக்கவில்லை. ஒரு நாள் மட்டும் சூட்டிங் எடுத்தாங்க அதிலும் ஒரு சில காட்சிகள் மட்டும் தான் என்று கூறியிருந்தார். அந்த பாடலில் நானும் இருக்கேன்னு சொன்னாங்க. ஆனால், அது நடக்கவில்லை. இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் கம்ப்ளைன்ட் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரஜினியிடம் இருந்து வந்த கால்:

தொடர்ந்து அவர் கூறுகையில், ஆனால், சிறிது நாள் கழித்து நான் ஒன்றை கேள்விப்பட்டேன். அந்த படத்தில் நடித்த நடிகை இந்த படத்தில் வேறொரு நடிகை நடித்தால் நான் அந்த படத்திற்கு வரமாட்டேன் என்று சொன்னதாக கூறினார்கள். பின்னர் இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகு ரஜினி சாரிடம் இருந்து எனக்கு கால் வந்தது. படத்திற்கு நடிக்க வந்ததற்கு நன்றி என்று மட்டும் சொன்னார். அவரால் முடிந்தது அது மட்டும் தான். இதுபோல் எனக்கு மட்டும் நடக்கவில்லை நிறைய பேருக்கு நடக்குது என்றும் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து:

மேலும், நான் எப்போதும் எல்லாரையும் விட ரொம்ப பஞ்சுவலா இருப்பேன். இண்டஸ்ட்ரில நிறைய ஆர்ட்டிஸ்ட் ப்ரொடியூசர் பணத்தை மிஸ் யூஸ் பண்ணுவாங்க. ஆனால், நான் ஒரு ஹோட்டல் புக் பண்ணும் போது கூட அப்படி பண்ண மாட்டேன். ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் எல்லாம் அவங்களே போட்டுக்கிட்டுது தான். மக்கள் ஒன்றும் அந்த பட்டத்தை கொடுக்கல. ஒரு பத்து பிஆர் வச்சி பத்து பேப்பரில் போட சொல்லி வந்த பட்டம் தான் இதெல்லாம். அதனால அவங்க மத்த நடிகர் நடிகைகளை ஓரம் கட்டிடறாங்க. அந்த மாதிரி பண்றவங்க ரொம்ப இன்ஸ்டெக்யூர்டா ஃபீல் பண்றாங்கனு நினைக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் மம்தா.

‘நோ’ சொல்ல கத்துக்கணும்:

அதனைத் தொடர்ந்து மம்தா கூறுகையில், சில புரொடக்ஷன் படத்துக்காக மீட்டிங் கூப்பிடுவாங்க. நானும் ரொம்ப தூரத்திலிருந்து வந்து மீட்டிங் அட்டென்ட் பண்ணுவேன். அதுக்கப்புறம் அந்தப் படத்தைப் பற்றி ஒரு அப்டேட்டும் இருக்காது. கடைசியில் பார்த்தால் அந்த படம் ரிலீஸ் ஆயிருக்கும். அதனால ஒரு படத்திற்கு ஒரு ஆர்டிஸ்ட் வேண்டாம் என்றால் அவர்களுக்கு கண்டிப்பாக கன்வே பண்ண வேண்டும். அதாவது இங்கு எல்லாரும் ‘பணிவாக நிராகரிக்க’ கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆதங்கத்தோடு கூறியிருந்தார் மம்தா மோகன்தாஸ்.

Advertisement