47 வயதில் இப்படியா..? கவர்ச்சி போட்டோ வெளியிட்ட மனிஷா கொய்ராலா.!புகைப்படம் உள்ளே.!

0
675
manisha

பாலிவுட் திரை துறை பொறுத்தவரை கவர்ச்சி என்பது நடிகைகளுடக்கு ஒரு பொருட்டாகவே இருந்தது இல்லை. அதே போல நீச்சல் உடை அணிந்து நடிப்பது என்பதெல்லாம் சர்வ சாதாரணமான ஒரு விடயம்.ஆனால், 47 வயதில் நடிகை மனிஷா கொய்ராலா நீச்சல் உடையில் நடித்திருப்பது ரசிகர்களை ஷாக் அடைய வைத்துள்ளது.

manisha koirala

பாலிவுட் நடிகையான மனிஷா கொய்ராலா இயக்குனர் மணிரத்னம் இயக்கியத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பாம்பே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தமிழில் இந்தியன், முதல்வன்,பாபா என்று ஒரு சில தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால், இந்தி சினிமா உலகில் அம்மணி படு பேமஸ் இந்தியில் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

இந்தி சினிமாவில் நடித்தாலும் இவர் இதுவரை பிக்கி உடையில் நடித்தது கிடையாது. இந்நிலையில் தற்போது நடிகை மனிஷா கொய்ராலா இந்தியில் 4 இயக்குனர் இணைந்து எடுத்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரி’ என்ற படத்தில் நீச்சல் உடை காட்சியில் நடித்துள்ள்ளார். இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது இதற்கு மனிஷா கொய்ராலா பதிலளித்துள்ளார்.

manisha koiraala

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த அவர், ‘நான் இந்த படத்தில் நீச்சல் உடையில் நடித்திருப்பது இயக்குனர் திபகர் பஞ்ஜியின் யோசனை தான். அவர் என்னை இந்த காட்சியில் நடிக்க சொன்ன போது,நான் இளம் வயதில் கூட இப்படி ஒரு காட்சியில் நடித்தது இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் ‘அந்த காரணத்திற்காக தான் இப்போது நடிக்க சொல்லுகிறேன் என்றார்.’அதே போல நானும் கதாபாத்திரத்திற்கு தேவைபட்டால் கவர்ச்சியாக நடிக்க தயாராக உள்ளேன் ‘ என்று கூறியுள்ளார்.