மெர்சல் பட நித்யா மேனனா இது..? முன்பக்க அட்டை கவர்ச்சி புகைப்படம் உள்ளே .!

0
2959
nithya-menon-actress

நடிகர் சித்தார்த் நடித்த ‘180 ‘படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார். தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

nithya menon

பொதுவாக உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சிகளிலோ பெரிதாக நாட்டம் இல்லாத இவர் சில காலங்களாக உடல் எடை கூடி பருமனாக ஆகிவிட்டார். சமீபத்துல் இவர் நடிப்பில் வெளியான ‘மெர்சல் ‘ படத்திலும் சற்று குண்டாக தான் தோற்றமளித்தார். சமீபத்தில் இவர் குண்டாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவ அதனை பலரும் கிண்டல் செய்தனர்.

ஆனால் நான் குண்டாக இருப்பது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை.மேலும் நான் குண்டாக இருப்பது ஒருநாளும் எனக்கு தடையாக இருந்ததில்லை படங்களுக்காகவே நான் அப்படி இருந்தேன். ஆனால் இனி வரும் படங்களில் நான் கண்டிப் பாக மெலிந்தே காணப்படுவேன் என்று நித்யா மேனன் கூறியிருந்தார்.

தற்போது ‘ப்ராண’ என்ற தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பன்மொழியில் வெளியாகவுள்ள படத்தில் நடித்து வருகிறார் நித்யா மேனன். சமீபத்தில் இவர் பிரபல பத்திரிக்கையின் அட்டை படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார். அதில் பார்ப்பதற்கு ரசிகர்களின் கண்ணை பறிக்கும் அளவிற்கு அழகாக இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக, அதனை பார்த்த ரசிகர்கள் குண்டாக இருந்தாலும் நீங்கள் அழகு தான் என்று கூறிவருகின்றனர்.