காஞ்சனாவின் அடுத்த பார்ட்டில் இந்த இளம் சென்சேஷனல் நடிகையா? யார் பாருங்களேன்

0
318
- Advertisement -

காஞ்சனா 4 படத்தில் நடிப்பதன் மூலம் ‘மிருணாள் தாக்கூர்’, கோலிவுட்டில் நுழைய உள்ளார் என்ற செய்தி தான் இப்போது வைரலாகியுள்ளது. காஞ்சனா தொடர் திரைப்படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த திகில் உரிமையானது முனி திரைப்படத்துடன் தொடங்கியது. இந்த உரிமையில் தொடர்ந்து வந்த காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 படங்கள் இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

-விளம்பரம்-

மேலும் ஹிந்தி, கன்னடம் தவிர பல மொழிகளில் இப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்போது காஞ்சனா தொடரின் நான்காம் பாகத்தை திரையிட தயாராகி வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, இயக்கவும் உள்ளார் லாரன்ஸ். தற்போது காஞ்சனா 4 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

- Advertisement -

கோலிவுட்டில் மிருணாள்:

இந்நிலையில், காஞ்சனா 4 படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த திகில் படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைய உள்ளார். இப்படத்தின் கதையும், படத்தில் தனது கதாபாத்திரத்தை வடிவமைத்த விதமும் பிடித்த காரணத்தால் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.காஞ்சனா 4 இல் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க போவதாக கூறப்படுகிறது.

மிருணாளின் முதல் திகில் படம்:

மிருணாள் தாக்கூர் தனது திரையுலக வாழ்க்கையில் நிறைய காதல் மற்றும் ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார். காஞ்சனா 4 படம் மூலம் முதன்முதலில் திகில் படத்தில் நடிக்கப் போகிறார். ஹிந்தியில் ஆந்தாலஜி திரைப்படங்களில், சில திகில் படங்கள் நடித்திருந்தாலும், முழு திகில் படத்தில் கதாநாயகியாக நடிப்பது இதுவே முதல் முறை. மேலும், காஞ்சனா 4 திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

-விளம்பரம்-

மிருணாள் தாக்கூர் குறித்து:

நடிகை மிருணாள் தாக்கூர் மகாராஷ்டிரா மாநிலம் துளி என்னும் ஊரில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் உண்டு. இதனால் இவர் தன்னுடைய கல்லூரி படிக்கும் போது நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு இவர் மாடலிங் செய்தார். தொடர்ந்து விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. முதன்முதலாக 2014 ஆம் ஆண்டு ‘வெட்டித்தாண்டு’ என்ற மராத்தி படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.

டோலிவுட்டிலும் மிருணாள்:

தொடர்ந்து மராத்தி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த இவர், ‘சீதா ராமன்’, ‘ஹாய் நானா’ போன்ற தெலுங்கு படங்கள் மூலம் டோலிவுடிலும் வெற்றியை கண்டார். மேலும் சீதாராமன் என்ற படத்தின் மூலம் இவர் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் என்றே சொல்லலாம். இப்போது காஞ்சனா 4 மூலம் தமிழில் அறிமுகமாக உள்ள மிருணாள் தாக்கூர், மேலும் நிறைய படங்களில் பிசியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Advertisement