இந்த கவர்ச்சி உடையில் இருப்பது நான் இல்லை..! கோபத்தில் நிவேதா பெத்துராஜ்.! புகைப்படம் உள்ளே

0
2624
Actress nivetha
- Advertisement -

அட்டகத்தி தினேஷ் நடித்த “ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ் .அதன் பின்னர் 2017 இல் வெளியான விஜய் சேதுபதியின் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற படத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Actress Nivetha Pethuraj

தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் “டிக் டிக் டிக்” மற்றும் விஜய் ஆண்டனி நடித்துவரும் “திமிருபுடிச்சவன்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக படங்களில் அந்த அளவிற்க்கு கவர்ச்சி காட்டாத நடிகை நிவேதா பெத்துராஜ் சில நாட்களுக்கு முன்னர் பிகினி உடையில் இருப்பது போன்று ஒரு புகைப்படம் வந்தது. பலரும் அந்த புகைப்படத்தை பார்த்து நிவேதா பெத்துராஜா இது என்று அச்சர்யப்பட்டனர். ஆனால் உண்மையில் அந்த பிகினி உடையில் இருப்பது ஒரு வட இந்திய மாடல் அழகி ரித்து ஜீ என்று பின்னர் தான் தெரிய வந்தது. .

- Advertisement -

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் மீண்டும் கவர்ச்சியாக இருப்பது போன்ற ஒரு சில புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தில் இருப்பது நிவேதா பெத்துராஜ் தான் என்று சமூக வலைத்தளத்தில் அந்த புகை படங்களை ஷேர் செய்து வந்தனர்.

nivetha-pethuraj

ஆனால், அந்த புகைபடத்தில் இருப்பது நான் இல்லை இல்லை என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் சமீபத்தில் தெரிவிக்கையில்”சமீப காலமாக நான் கவர்ச்சியான உடைகளில் இருப்பது போன்று ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் உணவில் அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை. எனது பெயரை கெடுக்க வேண்டும் என்றே ஒரு சிலர் இவ்வாறு செய்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement