படத்துக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியா நடிப்பேன் ! ஆனா எங்க அம்மாவுக்கு…! பிரபல நடிகை ஓபன் டாக் !

0
922
- Advertisement -

தமிழ், மலையாளம் ரெண்டுலயுமே பிஸியா படங்கள் பண்ணிட்டு இருக்கேன். மலையாளத்தில் மம்மூட்டி சார் படம் முடிந்தபிறகு, `நீயா-2’ பட ஷூட்டிங் தொடங்கிடும். அடுத்து `யார்’ படம் ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர்.

rai lakshmi

நான் நடிச்சதுலேயே மிகக்குறைந்த இடைவெளியில் எடுக்கப்பட்ட படம். ஒரு மாசத்துல ஷூட்டிங்கே முடிஞ்சிடுச்சு. சினிமா வேலைநிறுத்தம் முடிஞ்சதும் இந்த ரெண்டு படங்களும் திரைக்கு வந்துடும்.

- Advertisement -

நீயா-2′ படத்துல க்ளாமர் அதிகமா இருக்கும்னு சொல்றாங்களே…”

“இந்தப் பட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. `நீயா-2′ படத்துல கமிட்டானதும் அதோட முதல் பார்ட்டைப் பார்த்துட்டேன். அதுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கதை இந்தத் தலைமுறைக்கு ஏற்றமாதிரி மாறியிருக்கு.கதைக்கு கிளாமர் அவசியமா இருந்ததுனா, கட்டாயம் பண்ணுவேன். வெறும் கமர்ஷியல் நோக்கத்துக்காக மட்டும் கிளாமர் பண்ணணும்னு சொன்னா, நான் பண்ணமாட்டேன். நீயா-2 அப்படிப்பட்ட ஒரு படம் இல்லை.

குடும்பம் பற்றி சொல்லுங்க…

அம்மா, அப்பா, ரெண்டு அக்காக்கள். எல்லாரும் கர்நாடகா மாநிலம், பெல்காம் நகர்ல இருக்காங்க. இரண்டு அக்காக்களுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. என் அம்மாவுக்கு நான் நடிகையா இருக்குறது சுத்தமா பிடிக்கலை. இருந்தாலும், இப்போ சினிமாவுல எனக்கு ஒரு இடம் கிடைச்சிருக்கிறதால எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காம இருக்காங்க. ரொம்ப ஸ்ட்ரிக்ட் குடும்பம். சின்ன வயசுல இருந்தே ஹோம்லியா டிரஸ் பண்ணணும்னு விரும்புவாங்க.

lakshmi rai

அம்மாவுடன் ஒப்பிடும்போது அப்பாவும் அக்காவும் சினிமாவுல எனக்கு நல்ல சப்போர்ட் பண்றாங்க. ஆனா, சினிமாவுக்கும் குடும்பத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை. சின்ன வயசுலயே சுதந்திரமா வளர்ந்துட்டேன். சினிமாவுல தனி ஆளா இருந்துதான் இத்தனையையும் சாதிச்சிருக்கேன்.

Advertisement