ஷகீலா போஸ்டரால் நடிகர் சங்கத்துக்கு வந்த சோதனை ! புகைப்படம் உள்ளே !

0
1159
Actress shakeela
- Advertisement -

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதிய திரைப்படங்கள் எதையும் வெளியிடாமல் ஒருபக்கம் போராட்டத்தில் குதித்துள்ளது.மற்றொருபுறமோ ஒட்டுமொத்த தமிழகமும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென்ற கோரிக்கைகளுடனும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றன.

nadigar sangam

இந்நிலையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள போராட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் காலை முதல் நடைபெற்றுவருகின்றது.

- Advertisement -

இதில் முன்னனி நடிகர்களான விஜய்,சூர்யா,தனுஷ்,சிவகார்த்திகேயன்,கமல் மற்றும் ரஜினி ஆகிய நடிகர்கள் கலந்துகொண்டனர்.சமூகவலைத்தளங்களில் ஐபிஎல்-ஐ புறக்கணிப்போம் என்றும் பலர் குரலெழுப்பி வருகின்னறனர்.

தமிழகம் முழுவதுமே போராட்ட களமாக மாறிவர, புதிய திரைப்படங்கள் எதுவும் கடந்த ஒருமாத காலமாக வெளியிடப்படாத நிலையில் தியேட்டர்கள் பல இழுத்து மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் கோயமுத்தூரில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றோ இது எதைப்பற்றியுமே கவலைப்படாமல் கவர்ச்சி நடிகை ஷகிலா வாரம் என ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது.

actress-shakila

புதுப்படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஷகிலா படங்களை வெளியிட்டு தியேட்டருக்கு ஆட்களை வரவைக்க தியேட்டர் நிர்வாகம் முடிவுசெய்துள்ளதாக தெரிகின்றது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மனம் அலைபாயும் விதமாக ஒட்டப்பட்டிருக்கும் இந்த விளம்பர போஸ்டர்கள் போராட்டக்காரர்களையும், பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

Advertisement