வீரா மேல் காதல் வந்தது இப்படித்தான்..! ok சொன்ன காரணம்? காதல் ரகசியத்தை உடைத்த நமீதா

0
618
Namitha Actress
- Advertisement -

நடிகை நமிதாவிற்கும் அவருடைய நண்பரும் காதலருமான வீராவும் வரும் 24ஆம் அதேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். 2004ல் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நமிதா.

namitha veera

அதன் பின்னர் சில படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகிய மாறினார். பின்னர் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் அப்படியே மறைந்து போனார். பின்னர் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கழந்து கொண்டதனால் மீண்டும் மக்கள் கண்ணில் பட துவங்கினார்.

- Advertisement -

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவிற்குப் பின் தனது நண்பர் வீராவுடன் பழகி காதலில் விழுந்துள்ளார் நமிதா. வரும் 24 ஆம் தேதி இருவரும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார் நமிதா.

வீராவுடன் எப்படி காதலில் விழுந்தார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நமி:

வீரா ஒரு வளர்ந்துவரும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் எங்களின் நண்பர் சஷிதர் பாபுவினால் நாங்கள் இருவரும் அறிமுகமானோம், அப்போதிலிருந்து அவர் என்னை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.

veerA

பின்னர் நல்ல நண்பர்களானோம். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி மெழுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்து எனக்கு காதல் ப்ரபோஸ் செய்தார். என்னால் அதனை மறுக்க இயலவில்லை உடனடியாக சரி என சொல்லிவிட்டேன். அந்த நேரத்தின் ஒரு உணர்ச்சிப் பூர்வமாக காதலியிடம் கேட்பது போல் ஒரு கேள்வி என்னிடம் கேட்டார். அதனால் உடனடியாக அக்செப்ட் செய்துவிட்டேன்.

இருவரும் ஒரே மாதிறியான ரசனை கொண்டவர்கள், ஆன்மீக பிரியம் வாய்ந்தவர்கள். இவரைப் பார்த்தவுடன் தான் ஆண்களின் மீது ஒரு நம்பிக்கை வந்துள்ளது. எனக் கூறினார்.நமிதாவிற்கு வீரா மூன்றாவது காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement