டிவிக்கு வருவதற்கு முன் இதுதான் என் வேலை ! கலக்கப்போவது யாரு நாஞ்சில் விஜயன் சோக பின்னணி.!

0
5907
Nanjil-vijayan
- Advertisement -

நாகர்கோவிலில் பாலிடெக்னிக் படிச்சுட்டு இருந்த பையன்தான் நாஞ்சில் விஜயன். காமெடி பண்ணணும்கிற ஆசையில் பாலிடெக்னிக்கை பாதியிலேயே விட்டுட்டு சென்னைக்கு வந்துட்டான். ஆனால், `கலக்கப்போவது யாரு’ சீசன் 4 ஆடிஷன் முடிஞ்சதுக்குப் பிறகுதான் வந்தான். விஜய் டிவியில் காமெடிக்குப் பஞ்சம் இருந்த காலத்தில் தஞ்சம் புகுந்தவன்தான் விஜயன். அட… சிரிக்காதீங்க பாஸ். உண்மைதான்.

-விளம்பரம்-

actor nanjil vijayan

- Advertisement -

அப்போ அவன் ஸ்டாண்டப் காமெடிதான் பண்ணினான். அந்தச் சமயத்துல அவனுக்கு 17 வயசுதான் இருக்கும். பார்க்க ரொம்ப சின்னப் பையன் மாதிரி இருப்பான். இப்பவும் பார்க்கச் சின்னப் பையன் மாதிரிதான் இருக்கான். அப்போ எப்படி இருந்துருப்பான்னு யோசிச்சுப் பாருங்க. பரீட்சைக்குப் போற பசங்க எப்படி மனப்பாடம் பண்ணுவாங்களோ, அப்படி மனப்பாடம் பண்ணிட்டு வந்து ஒப்பிப்பான். காமெடிகள் நல்லா இருந்தாலும், சின்னப் பையனா இருந்ததனால மற்ற போட்டியாளர்களோட போட்டிப்போட முடியலை. அந்த சீசன்ல இருந்து எலிமினேட் ஆகிட்டான்.

அதுக்கப்பறம் ஒரு பெரிய கேப். அடுத்து `அது இது எது’ நிகழ்ச்சி ஆரம்பிச்சதும் அந்த நிகழ்ச்சிக்கு ஆடியன்ஸை அழைச்சிட்டு வர ஒருங்கிணைப்பாளர் வேலைப் பார்க்க ஆள் தேவைப்பட்டது. அதை விஜயன் பண்ணினான். இது பல பேருக்குத் தெரியாத தகவலா இருக்கும். இப்படி பல எபிசோடுகளுக்கு அவன்தான் வெப்பன் சப்ளையரா இருந்தான். அந்த டைம்ல சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்கவும் செய்தான். ஸ்கிரீன்ல வந்தாலும் பெருசா வெளியில தெரியாமலே இருந்தான். அவன் எப்போ லேடி கெட்டப் போட ஆரம்பிச்சானோ அப்போத்தான் செமையா ரீச்சானான். ஒரு லேடி கெட்டப் போடுறது சாதாரண விஷயம் இல்லை. `ஒரு நாள் கூத்துக்காக ஏன் மீசையை எடுக்கணும்’னு ஒரு ஃபேமஸான வசனம் இருக்கு. அது லேடி கெட்டப்புக்கு ரொம்ப சரியாகப் பொருந்தும். ஒரு ஸ்கிரிப்ட்டுக்காக லேடி கெட்டப் போடணும்னா, மீசை, தாடி எல்லாம் எடுக்கணும். அதனாலேயே பெரும்பாலும் லேடி கெட்டப் போடுறதுக்குத் தயங்குவார்கள்.

-விளம்பரம்-

ஆனால், விஜயன் அதுக்கெல்லாம் தயங்குற ஆளே இல்லை. அவன் லேடி கெட்டப் போட்டா, அதில் எந்த ஒரு விஷயமும் மிஸ்ஸாகாது. அதுக்காக அதிகம் மெனக்கெடுவான். இதுனால அவனுக்குக் கிண்டல், கேலிகள் அதிகமாக வந்திருக்கு. அதையெல்லாம் பார்த்துட்டு,`சார் இனிமேல் லேடி கெட்டப்பே வேணாம் சார்’னு விஜயன் என்கிட்ட சொன்னான். அதுக்கு நான்,`உனக்கு வாய்ப்புக் கிடைக்காம இருந்தப்போ இவங்க எல்லாரும் எங்கயிருந்தாங்க. இதையெல்லாம் கண்டுக்காத. இது ஒரு கலை; இது உன்னோட வேலை. அதை பண்ணிட்டே இரு’னு சொன்னேன். விஜயனுக்கு மட்டுமல்ல, எங்க டீம்ல யாரெல்லாம் லேடி கெட்டப் போடுறாங்களோ அவங்களுக்கெல்லாம் இந்தப் பிரச்னை வந்திருக்கு.

nanjil vijayan

அது இது எது’ நிகழ்ச்சியில பல டைம் லேடி கெட்டப் போட்டிருந்தாலும், `என்னமா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடுல விஜயன் போட்ட கெட்டப் அவனை வைரல் ஆக்குச்சு. அந்த எபிசோடுல ராமர், `ஏம்மா இதெல்லாம் ஒரு பொண்ணாம்மா?’னு கேட்பார். அந்த கவுன்ட்டரை இன்னைக்கு வரைக்கும் நிறைய சொல்லிட்டு இருக்காங்க.

இந்த மாதிரி நாஞ்சில் விஜயனுக்குப் பல கவுன்ட்டர்ஸ் கொடுப்போம். நட்சத்திர ஆமை, தாய்லாந்து தவளை, காமெடி சைக்கோ இப்படி விஜயனைப் பார்த்து நிறைய சொல்லுவான் தங்கதுரை. நான் நாஞ்சில் விஜயனை நாலு இன்ச் விஜயன்னு தான் கூப்பிடுவேன். இது அவனோட உயரத்தை கிண்டல் பண்றதுக்காக இல்லை; ஒரு ரைமிங்கா இருக்கிறனால சொல்லுவேன். அவ்வளவுதான்.

vijayan

தான் நடிக்கிற எபிசோடு எப்படி ஹிட்டாகணும்னு பொறுப்போட வேலைப் பார்ப்பானோ அதே மாதிரிதான் ஃபேமிலி சைடும் விஜயனுக்கு அதிக பொறுப்புகள் இருக்கு. சின்ன வயசுலேயே விஜயனோட அம்மா இறந்துட்டாங்க; சில வருடங்களா அவனோட அப்பாவும் உடம்பு சரியில்லாம இருக்கார். விஜயன்தான் அவனோட தம்பி, தங்கச்சியைப் பார்த்துக்கிறான்.`அது இது எது’ நிகழ்ச்சிக்காக ஒரு காலத்தில் ஆடியன்ஸை அழைச்சிட்டு வந்தவனுக்கு, இப்போ தனியா ஆடியன்ஸே உருவாகிட்டாங்க. அதுதான் நாஞ்சில் விஜயனோட வெற்றி.

Advertisement