தன் உடலை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்து போட்டோ வெளியிட்ட நடிகை.! புகைப்படம் உள்ளே

0
955
neha-bhasin
- Advertisement -

சினிமாவில் தான் நடிகைகள் படவாய்ப்பிற்காகவும், ரசிகர்களிடம் கவனத்தை பெறுவதற்காகவும் கவர்ச்சியில் ஈடுபடுகிறார்கள் என்றால், பாலிவுட் பாடகியான நேஹா பஸினும் கவர்ச்சியில் இறங்கி அசத்தி வருகிறார். மேலும் தனது உடலை கிண்டல் செய்தவர்களுக்கு, தனது உடல் மூலமே தக்க பதிலடியும் கொடுத்துள்ளார் பாடகி நேஹா பஸின்.

neha mithun

பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர், ஒர் இந்தியப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். மேலும் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பின்னணி பாடகியான இவர் இந்தியப் பெண்கள் நடத்தும் பாப்பிசைக் குழுவான ‘வீவா’ என்னும் இசை குழுவிலும் பங்கேற்றுள்ளார்.

- Advertisement -

இவர் தமிழில் அஜித் நடித்த ‘பில்லா ‘ படத்தில் ‘செய் ஏதாவது செய் ‘ என்ற பாடலையும் பாடியுள்ளார். 35 வயதாகும் இவர், 2016 ஆம் ஆண்டு சமீர் உதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னர் உடல் எடை கூடி பொசு பொசுவென்று மாறிய இவரை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வந்தனர்.

neha mithun

இந்நிலையில் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்த நேஹா பேசின், கவர்ச்சியான உடையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பாடல் பாடி, நடனமாடியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இவரை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். மேலும், தனது உடலை கிண்டல் செய்தவர்களுக்கு தற்போது இப்படி ஒரு ஷாக்கை கொடுத்து பதிலளித்துள்ளார் பாடகி நேஹா பஸின்

Advertisement