பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இன்று (Epi-733, Oct 20) – முழு எபிசோட் இதோ.

0
616
- Advertisement -

சீரியல் ஓபனிங்களிலேயே மீனா அப்பாவும், அம்மாவும் தனம் குழந்தையை பார்ப்பதற்காக மூர்த்தி வீட்டுக்கு வருகிறார்கள். மீனாவின் அப்பாவும், அம்மாவும் தனம் குழந்தையை பார்த்து கொஞ்சி மகிழ்ந்து நகை, காசு என கொடுக்கிறார்கள். பின் மீனாவின் அப்பா கயல் எங்கே என்று கேட்கிறார். கயல் தூங்கிட்டு இருக்கா அப்பா என்று மீனா சொல்கிறார். உடனே மீனா அம்மா அவருக்கு எப்பவுமே கயல் ஞாபகம் தான். எங்க குழந்தை அழுதாலும் கயல் பத்தி மட்டும் தான் யோசித்து கொண்டு இருப்பார் என்று சொல்லி அனைவரும் கலகலப்பாக பேசிட்டு இருக்கிறார்கள். அப்போது முல்லை எல்லாருக்கும் டி கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

மீனாவின் அம்மா நீ எப்போ குழந்தை பெத்துக்ப்போற என்று முல்லையிடம் கேட்கிறார்கள். முல்லை வெட்கப்பட்டு நிற்கிறார். அடுத்து குழந்தை தான் என்று சந்தோஷமாக பேசிட்டு இறக்கிறார்கள். அப்புறம் அப்பா கயலை விட்டு போக மனசு இல்லை என்று மீனா சொல்கிறார். உடனே அத்தாச்சி கயலை உங்க அப்பா கிட்டயே கொடுத்து விடு என்று சொல்ல்கிறார். கயலை விட்டு என்னால் இருக்க முடியாது என்று மீனா சொல்ல மூர்த்தியும் எங்களாலும் கயலை விட்டு இருக்க முடியாது என்று சொல்கிறார். உடனே அத்தாச்சி இந்த மூர்த்தி உன் குழந்தை இருக்கு இல்ல என்று பத்த வைக்கிறார். இதைக்கேட்டு மீனாவின் முகம் மாறுகிறது.

- Advertisement -

அப்படியே கட் பண்ண முல்லையின் அப்பா, அம்மா தனம் குழந்தையை பார்க்க வருகிறார்கள். இவங்களும் குழந்தையோடு கொஞ்சி விளையாடி நகை,காசு என குழந்தைக்கு தருகிறார்கள். உடனே அத்தாச்சி முதல் பேரன் வந்துட்டான் என்று திருப்பியும் கொளுத்தி போடுகிறார். இதை கேட்டு மீனா அப்ப கயல் என்ன என்று சோகமாக கேட்கிறார். பிறகு எல்லோரும் இவங்க ரெண்டு பேரும் முதல் பேத்தி,முதல் பேரன் என்று சொல்லி மீனாவை சமாதானம் செய்கிறார்கள். இருந்தாலும் மீனா மனதுக்குள் கவலை ஏற்படுகிறது. திருப்பியும் அத்தாச்சி சும்மா இருக்காமல் மீனாவின் குழந்தை உடன் ஒப்பிடும்போது தனம் குழந்தை தான் ரொம்ப அழகு என்று கொளுத்தி போடுகிறார்.

உடனே மீனா ரொம்ப வருத்தப்படுகிறார். ரெண்டு குழந்தையும் அழகு தான். கலர் எல்லாம் ஒன்னும் முக்கியம் இல்லை என்று சொல்லி கஸ்தூரி முகத்தில் பஞ்ச் கொடுத்த மாதிரி சொல்கிறார்கள். இருந்தாலும் மீனாவின் மனதில் இந்த குழந்தை பிறந்தவுடன் நம்ம குழந்தையை யாரும் பார்க்க மாட்டுகிறார்கள் என்று கவலைப்பட்டு வருத்தப்படுகிறார். அப்புறம் அத்தாட்சியும் முல்லையின் அம்மாவும் பேசிட்டு இருக்கிறார்கள். அப்போது பாத்து முல்லை அங்கு வருகிறார். உடனே அத்தாச்சி தன் வேலையை மீண்டும் காண்பிக்கிறார். முல்லையிடம் நீ எப்போ குழந்தை பெத்துக்கப்போற என்று கேட்கிறார். முல்லையின் அம்மாவும் உனக்கு என்று ஒரு குழந்தை வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார். உடனே முல்லையும் வெக்கப்பட்டு சிரித்துக்கொண்டே போகிறார்.

-விளம்பரம்-

அத்தாச்சி சுத்தி சுத்தி பத்த வைக்கிறார் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை. அப்டியே கட் பண்ண எல்லாரும் குடும்பமாக உட்கார்ந்து குழந்தையுடன் கொஞ்சி பேசிட்டு இருக்கிறார்கள். மொத்த வீடே சந்தோஷத்தில் இருக்கு. அப்போது கயல் எழுந்தவுடனே மீனா கயல் இடம் செல்கிறார். வீட்டில் எல்லோரும் கயலை பத்தி தான் பேசிட்டு இருக்கிறார்கள். ஆனால், கயலை கையில் வைத்து கொண்டு அந்த குழந்தை வந்த உடன் உனக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. உன்னை பற்றி யாரும் கவலை படுவதில்லை என்று மீனா புலம்புகிறார். இதோட இந்த எபிசோடு முடிக்கிறது. இனி வரும் காலத்தில் இந்த குழந்தைகளை வைத்து பெரிய வெடிகுண்டு வெடிக்க போதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement