சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல செய்தி வாசிப்பாளர்களுக்கு பல போன்ற இருக்கின்றனர். அந்த வரிசையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர். செய்தி வாசிப்பாளரான பனிமலர் கோயம்புத்தூரில் பிறந்தவர். பேஷன் டிசைனிங் படிப்பதற்காக சென்னை வந்தார். பின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் இவர் ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். அதிலும் இவர் தொகுத்து வழங்கிய வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். மேலும், சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்ததால் ஹீரோயினி ரேஞ்சுக்கு இவருக்கு கடைதிறப்பு விழா, விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பனிமலர் குறித்த தகவல்:
திருமணம் ஆகியும் இவருக்கு குழந்தை இல்லை. இது குறித்து பலரும் கேட்டிருக்கிறார்கள். இது பனிமலரை அதிகம் பாதித்திருக்கிறது. சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வீடியோவாக பதிவிட்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதில் அவர், டார்லிங்ஸ், தவமாய் தவமிருந்து நான் அம்மா ஆகப்போறேன். சீக்கிரம் 2 பாப்பா பெத்துக்கணும்ல ஆரம்பிச்சு,பாப்பா பெத்துக்கணும், பாப்பா எப்பதான் பெத்துக்குறது? பாப்பாவே பெத்துக்கணும், நமக்கு அம்மா ஆகுற தகுதி இல்லையா? மத்த மாசமா இருக்குற பெண்களை, குட்டிக் குழந்தைகளைப் பாத்தாலே(சத்தியமா மிகைப்படுத்தல social media ல பாத்தாலே) அழுகை வந்துடும்.
பனிமலர் பதிவு:
பாப்பாவே வேண்டாம், நமக்கு பாப்பாவே பொறக்காதுல வந்து நின்னுடுச்சு மனசு. அவ்ளோதான் இப்டியே உள்ளதவச்சு சந்தோசப்பட்டுகணும்னு எல்லாதுல இருந்தும் விலகி நாம உண்டு நம்ம வேல உண்டுன்னு இருக்கும்போது எல்லாமே தலைகீழா மாறுச்சு, நினைக்காத விசயங்கள் எல்லாம் நடந்துச்சு. குழந்தைக்கு முயற்சிக்கும்போதும் 1% நம்பிக்கைகூட இல்ல, எனக்கு குழந்தை பிறக்கும்னு, இப்பவரைக்கும் முழுமைய நம்பமுடியல. இது கனவா, நிஜமா நடக்குதானு. Scan-ல பாப்பாவோட இதயத்துடிப்ப கேக்கும்போதெல்லாம் கதறி அழுவேன், அதுக்காகவே ரொம்ப நேரம் காட்டுவாங்க. அப்ப மட்டும் உண்மைதான்போலனு தோணும். ஆரம்பத்துல இருந்து பாக்குறவுங்களுக்கு தெரியும் என் வாழ்க்கை எப்பயும் சுலபமானதா இல்ல. அது அடிச்ச அடிலதான் நான் இந்த நிலமைல இருக்கேன். இப்பவும் எவ்ளவோ பாரங்களோடதான் இந்த பயணத்தை தொடர்ந்துட்டிருக்கேன். சத்தமா கத்தி சொல்றேன் “ I’M PREGNANT“. எனக்குள்ள ஒரு பாப்பா இருக்கு. உங்க அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி என்று கூறி இருந்தார்.
நெட்டிசன் கமெண்ட்:
இப்படி ஒரு நிலையில் தனது நண்பர்கள் சர்ப்ரைஸாக தனக்கு வளைகாப்பு நடத்தியதாக சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் பனிமலர். இதற்கு பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் சிலர் பெரியார் பேத்திக்கு வளைகாப்பா! என்று கேலி செய்தனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் ‘எங்கே போனது பெரியாரியம்? ஊருக்கு தான் உபதேசமா ? இருந்தாலும் வாழ்த்துக்கள் சகோதரி’ என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பனிமலர், ‘பெரியார்னு பேரத்தவிர வேற ஒரு கருமமும் தெரியாது.
பனிமலர் பதிலடி:
அவருக்கு குன்றக்குடி அடிகளார் திருநீறு வச்சு விட்டார். அதை பெரியார் அழிக்கவில்லை. அதுக்கு அவருக்கு நம்பிக்கை இருக்குனு அர்த்தம் இல்லை. நண்பரின் மனம் புன்படக்கூடாது என்பதற்காக. என் நண்பர்கள் செய்வதை நான் ஏத்துக்குறேன், சந்தோசப்பட்றேன். உன் வேலைய பாத்துட்டுப்போ உன் வாழ்த்து மயிறு தேவை இல்ல. குங்குமம் சந்தனம் எல்லாம் கடவுள் படைச்சாரா? கடவுக்கு படைக்கப்படடதுனு என்ன ஆதாரம்? எதாச்சும் வந்து வாந்தி எடுக்க வேண்டியது’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.