என் மகனை அப்படி கூப்பிடவேண்டாம்..! இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகரின் மனைவி!

0
1536
Pavan-kalyaan
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என்று அழைக்காடுபவர் நடிகர் பவன் கல்யாண். தெலுங்கு சினிமாவில் இவரது புகழ் கோடி கட்டி பறந்தாலும் இவரது சொந்த வாழ்க்கையில் இவருடைய பெயர் சற்று டேமேஜாக தான் உள்ளது.

renudesai-pawankalyan

நடிகர் பவன் கல்யாண் இது வரை மூன்று திருமணம் செய்துள்ளார். தனது 26 வயதில் 19 வயது நிறைந்த நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.

- Advertisement -

பின்னர், 2001 ஆம் ஆண்டு ரேணு என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் 2004 ஆண்டு அகிரா என்ற மகனும் பிறந்தார். 7 வருடங்கள் தொடர்ந்த இவர்களது திருமணம் 2008 ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்தது. இந்நிலையில் ரேணு தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்று டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

son-Akirai

மேலும், இவர்களது மகனை அனைவரும் ஜூனியர் பவர் ஸ்டார் என்று அழைத்து வந்து வருகின்றனர். தனது மகனை ஜூனியர் பவர் ஸ்டார் என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், என்னுடைய வலைதள பதிவுகளில் யாரேனும் அப்படி என் மகனை குறிப்பிட்டு வந்தால் அவர்களை நீக்கி விடுவேன் என்றும் ரேணு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement