கஞ்சா விற்ற பா.ம.க தலைவருக்கு தக்க பாடம் புகுத்திய விஜய் ரசிகர்கள்…!

0
135
vijay

சமீப காலமாக கட்சி பிரமுகர்கள் சிலர் சர்ச்சைகளில் சிக்கி வருவது அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் திமுக கட்சி பிரமுகர் ஒருவர் அழகு நிலையத்தில் வேலை பார்த்த பெண் ஒருவரை தாக்கும் சி சி டிவி காட்சி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் பா மா க கட்சி தலைவர் ஒருவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ramadoss

சமீபத்தில் சென்னை பல்லவன் சாலை அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அப்புகுதியில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சென்னை புரைசைவாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பா மா கா கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்று தெரியவந்தது. இதையடுத்து சரவணன் கட்சிக்கு அவபெயர் ஏற்படுத்தி விட்தாக கூறி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினர்.

பா மா கட்சியின் செயல் தலைவர் அன்பு மணி ராமதாஸ் அமைச்சராக இருந்த போது புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான கண்டனங்களை எழுப்பி வந்தார்.

GANJA

சமீபத்தில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போல காட்சி இடம்பெற்றிருந்ததால் அதனை எதிர்த்து ராமதாஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் கட்சி தொண்டர்களும் சர்கார் படத்தின் போஸ்டருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். இதையடுத்து படத்தின் போஸ்டர் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கபட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பா ம கா கட்சியின் மீது பெரும் கோவத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பா மா கா கட்சி தலைவர் ஒருவரே கஞ்சா விற்று கைது செய்யப்பட்டுள்ளதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்களை போட்டு ட்ரால் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கஞ்சா விவகாரத்தில் கைது செய்யபட்ட பா மா கா என்று குறிப்பிடும் வகையில் ஹாஸ் டாக்கை கூட ட்விட்டரில் பரவி வருகின்றனர். தற்போது இந்த ஹாஸ் டாக் தமிழகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.